ஜகத் புஷ்பகுமார பாராளுமன்றத்திற்கு?
குருணாகல்
மாவட்ட ஐக்கிய
மக்கள் சுதந்திர
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஷாநாயக்க
காலஞ்சென்றதை அடுத்து குருணாகல் மாவட்டத்தின் ஐக்கிய
மக்கள் சுதந்திர
கூட்டமைப்பிற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம்
நிலவி வருகின்றது.
குருணாகல்
மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சாலிந்த திஷாநாயக்க பின்னால் முறையாக
சாந்த பண்டார
மற்றும் டீ.பீ ஹேரத்
ஆகியவர்கள் உள்ளனர்.
அதனடிப்படையில்
சாந்த பண்டார
பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட
வேண்டுமாக இருந்தாலும்
அவர் தேசிய
பட்டியலில் பாராளுமன்றத்தில் இருப்பதனால்
டீ.பீ
ஹேரத்திற்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவிருந்தது.
எவ்வாறாயினும்
பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இன்று
(07) தேசிய பட்டியலில் இருந்த விலகிக் கொள்வதாக
தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில்
தற்போது குறித்த
வெற்றிடத்தை நிரப்புவதற்காக பல்வேறு தரப்புகளில் இருந்து
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்
ஜகத் புஷ்பகுமார,
பிரசன்ன சோலங்கஆராச்சி,
மற்றும் முன்னாள்
கிழக்கு மாகாண
ஆளுனர் ஹிஸ்புல்லா
ஆகியவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும்
கடந்த தேர்தலில்
அதிக வாக்குகளை
பெற்ற ஜகத்
புஷ்பகுமாரவிற்கு குறித்த பதவி வழங்கப்படுவதற்கு கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அரசியல்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment