ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம்
(J.M.I) அமைப்பைச் சேர்ந்த மேலும் மூவர் கைது
சஹ்ரானுடன்
நுவரெலிய மற்றும்
ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற
மேலும் மூவர்
அம்பாறை பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள்
இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது
இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது
செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலன்னறுவை
பகுதியை சேர்ந்த
மொஹிதீன் பாவா
மொஹமட் எனும்
அபூ அக்ரான்
என்பவராவார்.
குறித்த
நபர் நுவரெலியாவில் இடம்பெற்ற
சஹ்ரானின் கருத்தரங்களில்
கலந்து கொண்டவர்
என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்
மாவனெல்ல, தனாகம
பகுதியை மொஹமட்
ரியால் மொஹமட்
சஜிட் எனும்
அபூ சல்மான்
என்பவரும் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த
நபர் சஹ்ரானின்
நுவரெலியாவில் கருத்தரங்களில் கலந்து கொண்டவர் என
தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்
கைது செய்யப்பட்ட
மூன்றாவது நபர்
வரகாபெல பகுதியை
சேர்ந்த மொஹமட்
ரம்ஸின் ருஸ்தி
அஹமட் எனும்
அபூ அல்வகார்
என்பவராவார்.
குறித்த
நபர் இடம்பெற்ற
சஹ்ரானின் ஹம்பாந்தோட்டை
கருத்தரங்களில் கலந்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த
அமைப்பைச் சேர்ந்த
09 பேர், அம்பாறை
பிரதேசத்தில் கடந்த ஓரிரு தினங்களுக்குள் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,
ஸஹ்ரானுடன் நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளிலுள்ள
முகாம்களில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் 3 சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (05) கைது
செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment