தம்பலகாமம் பிரதேச சபை
முஸ்லிம் காங்கிரஸ் பெண் உறுப்பினர்
இன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயம்
எம்.எஸ்.தௌபீக்கை சந்திக்க சென்ற போது நேர்ந்த கதி
திருகோணமலை
- தம்பலகாமம் பகுதியில் பிரதேச சபை பெண்
உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த
பெண் நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை சந்திப்பதற்காக
முச்சக்கர வண்டியில்
சென்று கொண்டிருந்த
போதே இவ்விபத்து
நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்தவர்
தம்பலகாமம் பிரதேச சபை சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் பெண்
உறுப்பினர் எஸ்.பரீதா என தெரியவந்துள்ளது.
வாகனம்
வேகக் கட்டுப்பாட்டை
இழந்தமையினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதெனவும்,
விபத்தில் காயமடைந்தவர்
திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment