ஈரான் நாட்டில் ஆண்கள் வாலிபால் பார்க்க முயன்ற
பிரிட்டன் பெண்ணுக்கு 1 ஆண்டு சிறை



ஈரான் நாட்டின்  விதிகளை மீறி ஆடவர் வாலிபால் விளையாட்டு போட்டியை காண சென்றதாக அந்நாட்டில் பிரிட்டன் பெண்ணுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கான்ச்சே கவாமி( வயது 25) கடந்த ஜூன் மாதம் ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே நடத்த வாலிபால் விளையாட்டு போட்டியை காண சென்ற குற்றத்துக்காக அந்த விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து ஈரான் பொலிஸ் அதிகாரி கூறும்போது தெரிவித்திருப்பதாவது, "ஈரானில் ஆடவர் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை உள்ளது. பெண்கள் மீது ஆண்கள் முறையற்ற வகையில் அத்துமீறல்கள் நடப்பதை தவிர்க்கும் விதத்திலேயே இது போன்ற விதிகள் இங்கு உள்ளன. அதனை மதித்து நடக்க வேண்டியது பெண்களின் கடமை" என்று கூறியுள்ளார்.
ஈரானில் இஸ்லாமிய நடைமுறைகளை முன்வைத்து அரசு நிர்வாகம் நடக்கிறது. இதனால் அங்கு இது போன்று பல விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால் கான்ச்சே மீது அரசின் விதிகளை மீறி நடந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் எவின் சிறைக்கு விசாரணைகாக அனுப்பப்பட்டார்.
ஈரான் வாழ் பிரிட்டன் நாட்டு பெண்ணான கான்ச்சே கவாமி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அந்த நாட்டில் பிரிட்டன் வாசிகள் போராட்டங்களை மேற்கொண்டனர். அவர்கள் கான்ச்சே கவாமிக்கு ஆதரவாக இணையதளத்தின் மூலம் சுமார் 5 லட்சம் ஆதரவாளர்களை திரட்டி அவரை விடுதலை செய்ய போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஞாயிறு) அன்று கான்ச்சே மீதான வழக்கு தொடர்பான விசாரணையில் அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கான்ச்சே கவாமியின் சகோதரர் இது குறித்து கூறும்போது, "ஈரான் நாட்டு விதிகள் என்று முறையில் கான்ச்சே கைது செய்யப்பட்டதாக நீதிபதிகள் கூறினர். ஆனால் இங்கு எதுவுமே வெளிப்படையான முறையில் நடத்தப்படவில்லை என்பது தான் உண்மை. எனது சகோதரி ஏற்கனவே 5 மாத சிறை தண்டனையை பெற்று இருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களை முன்வைத்து சட்டத்தை மீறி கான்ச்சே பிரச்சாரம் செய்ததாக தண்டனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் எங்களுக்கு இது தொடர்பான விவரம் இன்னும் கிடைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top