ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட டாஸ்மானியா தீவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில்
100 வயதான கிளி!


ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட டாஸ்மானியா தீவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் 100 வயதான ஒரு கிளி பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அந்த கிளிக்கு சரணாலய ஊழியர்கள் பிறந்தநாள் கொண்டாடினார்கள்.
100 என்ற வடிவத்தில் உருவாக்கப்பட்ட கேக்கில், மூன்று மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து, அதை அந்த கிளிக்கு பரிசாக அளித்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து அந்த கிளிக்கு வாழ்த்து செய்தியும் வந்துள்ளது.

பொதுவாக, இந்த வகையைச் சேர்ந்த கிளிகள், வனத்தில் இருந்தால் 40 ஆண்டுகளும், சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டால் 70 ஆண்டுகளும்தான் அதிகபட்சமாக வாழும் எனக் கூறப்படுகின்றது. ஆனால், அதையும் தாண்டி, 100 ஆண்டுகளை இஎதக் கிளி  பூர்த்தி செய்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top