கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை
நூல்
மும்பையில்
வெளியீடு
கிரிக்கெட்
வீரர் சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை நூல் மும்பையில் வெளியிடப்பட்டது. 'என் வழியில் விளையாடுகிறேன்' ப்ளேயிங்
இட் மை வே' (‘Playing It My Way’)என்ற
பெயரில் சச்சின் சுயசரிதை எழுதியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்
சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோர் விழாவில் பங்கேற்றார்கள்.
தன் சுயசரிதையின் முதல் பிரதியை தனது தாயிடம் டெண்டுல்கர் வழங்கினார். நூலின் பிரதியைப் பெற்றதும் தனது தாயின் முகத்தில் தோன்றிய பெருமிதம் மதிப்பற்றது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் தற்போது தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டுள்ளார். இரண்டாவது பிரதியை தனது முதல் பயிற்சியாளரான ராமாகந்த் அச்ரேகரிடம் வழங்கினார்.
ஏற்கனவே இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில் தனது முதல் பயிற்சியாளர் அச்ரேகரிடம் இரண்டாவது பிரதியை வழங்கும் சச்சின். உடன் சச்சினின் மகள் சாரா |
0 comments:
Post a Comment