ஜாதிக யஹல உறுமய அரசிடம் சமர்ப்பித்துள்ள
19 அம்சக் கோரிக்கைகளுக்கு
தாம் ஆதரவளிப்பதாக
ஜாதிக
யஹல உறுமய
அரசிடம் சமர்ப்பித்துள்ள
19 அம்சக் கோரிக்கைகளுக்கு
தாம் ஆதரவளிப்பதாக
ஐக்கியத் தேசியக்
கட்சியின் மத்திய
மாகாண சபை
உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான
அசாத் ஸாலி
தெரிவித்தார்.
பொது
எதிரணியினர் ஜனாதிபதித் தேர்தல் குறித்து குழப்பமடையாது
இருப்பதினாலேயே பொது வேட்பாளர் தெரிவில் இத்தனைத்
தாமதம் என்றும்
அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதிகாரத்தைப்
பகிர்ந்து நாட்டை
ஐக்கியப்படு அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு
கொழும்பில் அமைந்துள்ள அசாத் ஸாலியில் இல்லத்தில்
நேற்று நடைபெற்ற
போதே அவர்
இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும்
தெரிவிக்கையில்,
"யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளைக்
கடந்து விட்டது.
இதுவரையிலும் இது குறித்து பேசாத ஜனாதிபதி
மஹிந்த தேர்தல்
நெருங்கும் இவ்வேளையில் புலிக்கதையை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
தனது
அரசில் நடக்கும்
ஊழல், கொள்ளை
என்பன குறித்து
இதுவரையிலும் வாய்திறவாத
இவர், தேர்தல்
நெருங்கும் போது புலிக்கதை புணைவது ஒன்றும்
புதிதல்ல என்பதையும்
மக்கள் அறிந்திருப்பார்கள்.
அதேநேரம்,
எதிரணியினர் பொதுவேட்பாளர் தெரிவில் குழம்பிப் போயுள்ளதாக
அரச தரப்பிடம்
இருந்து தற்போது
கூறப்படுகின்றது.
ஆனால், நாம் ஜனாதிபதித்
தேர்தல் குறித்து
அஞ்சவில்லை. மாறாக ஜனாதிபதி மஹிந்தவே
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற
பயத்தில் தேர்தல்
ஆணையாளரால் தேர்தல் குறித்து உத்தியோகப் பூர்வ
அறிவிப்புகள் ஏதும் வராத இந்நிலையில் பிரசாரங்களை
மேற்கொண்டு வருகிறார்.
இன்னும்
தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் இருக்கின்ற போது
எதிரணியினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்ச வேண்டிய
அவசியமில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.'' என்றார்.
மேலும்,
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான
சுரேஸ் பிரேமசந்திர
வடக்கு -கிழக்கு
மாகாணங்களில் இராணுவ ஆட்சி நிலவுவதாக தொடர்ந்தும்
குறல் கொடுத்து
வருகிறார்.
இவரின் இக்கருத்தானது உண்மையில்
வரவேற்கத்தக்க ஒன்றாகும். வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் இதுவரை 87 ஆயிரம் ஏக்கர் தமிழர்
காணியும், 30 ஆயிரம் ஏக்கர் முஸ்லிம் மக்களின்
காணியும் இராணுவத்தால்
கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு
சிவில் ஆட்சியை
விடுத்து இராணுவ
ஆட்சிப் பாதையில்
நாட்டை இழுத்துச்
செல்லும் இவ்வரசானது
அபிவிருத்தியைக் கூட சரியான முறையில் செய்யாதுள்ளது.
இன்று நாட்டிலுள்ள
பெரும்பான்மையான மாவட்ட நீதிமன்றங்களில் ஒழுங்கான முறையில்
சுற்றுப் புறச்சுழல்
பாதுகாக்கப்படுவதில்லை. அங்குள்ள கணினி
அறைகளில் ஏ.சி வசிதிகள்
இல்லை. ஏன்,
சாதாரண மின்விசிறி
வசதியைக் கூட
அரசு ஏற்படுத்திக்
கொடுக்க வில்லை.''-என்றும் குற்றம்
சுமத்தினார்.
அத்தோடு,
அரசின் பங்காளிக்
கட்சியான ஜாதிக
யஹல உறுமய
அரசிடம் 19 அம்சக் கோரிக்கையை அரசிடம் முன்வைத்துள்ளது.
இது வரவேற்கத்தக்க
ஒன்றாகும். இத்தனைக் காலமும் அரசுடனேயே இருந்து
இப்போதாவது இவ்வரசு குறித்து தெரிந்துக் கொண்டமையை
எண்ணி எமக்கு
மகிழ்ச்சியே.
இவர்களின்
இந்தக் கொள்கைகள்
நாட்டிற்கு அவசியமானது என்றே நாம் கருதுகிறோம்.
ஆகவே, இவர்களின்
இந்தக் கோரிக்கைக்கு
நாமும் பூரண
உடன்பாட்டை தெரிவித்துக் கொள்கிறோம்''
-என்று
ஹெல உறுமயவின் செயற்பாட்டை அஸாத் ஸாலி பாராட்டினார்.
" ஆனால்,
ஹெல உறுமயவின்
அத்துரலிய ரத்ன
தேரரின் செயற்பாட்டிற்கு
சக தேரரான
கலகொட அத்தே
ஞானசார தேரர்
கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏன், பைத்தியம்
என்று கூட
ரத்ன தேரரை
தூற்றியுள்ளார்.
நாம் பொது பல
சேனா அரசின்
ஒப்பந்தத்தை கையில் எடுத்து செயற்படுகின்றது என
ஆரம்பத்திலேயே சொன்னபோது ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு
ஞானசார தேரரினன்
இக்கருத்தானது தக்க சான்றாகும்'' என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசிற்கு
எதிராக எழுந்துள்ளமையால்
தற்போது அத்துரலிய
ரத்ன தேரரின்
பேஸ்புக் மற்றும்
ஈமெயில் முகவரிகள்
முடக்கப்பட்டுள்ளன. அரசின் பங்காளியான
இவருக்கே இந்த
நிலைமை என்றால்
சாதாரண மக்களின்
நிலையை சற்று
சிந்தித்துப் பார்க்க வேண்டும். எது எப்படியோ
இந்நாட்டிற்கு மாற்றம் ஒன்று அவசியமாகியுள்ளது. அதற்கமைய வெகு விரைவில் அந்த
மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அசாத் சாலி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment