ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல் திணைக்களம்
300 கோடி ரூபா பணத்தை கோரியிருப்பதாகத் தெரிவிப்பு?
ஜனாதிபதி
தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல் திணைக்களம் 300 கோடி ரூபா பணத்தை நிதி அமைச்சிடம் கோரியுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில்
தேசிய ரீதியான தேர்தல் ஒன்று நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யும் நோக்கிலே
இந்த நிதியினை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலை
நடாத்துவதற்கு தேவையான அதிகாரிகளை அணிதிரட்டுதல், தேர்தலுக்கான ஆரம்ப கட்டப் பணிகளையும்
அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. வாக்கெடுப்பு
நிலையங்கள் பற்றிய தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் பயன்படுத்தும்
நோக்கில் அரசாங்க நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஒன்றும் மேற்கொள்ளப்படுகின்றது.
இம்முறை
வாக்கெடுப்பின் போது 2014ம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பின் அடிப்படையில் வாக்காளர்கள்
வாக்களிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை கோடி பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளதுடன், சுமார்
பத்து லட்சம் பேர் வரையில் தபால் மூலம் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment