அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஒஸ்ரியா பயணம்

  எ.எச்.எம்.பூமுதீன்


கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சரும் ...கா. தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன் இன்று (03/11/2014) அதிகாலை ஒஸ்ரியா பயணமானார்.
ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு  செய்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி மாநாடொன்றில் கலந்துகொள்ளும் பொருட்டே அமைச்சர் ஒஸ்ரியா பயணமானார்.
ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகத்தின் அழைப்பை ஏற்று சென்றிருக்கும் அமைச்சர், நாளை (04/11/2014) இடம்பெறும் குறித்த மாநாட்டில் இலங்கையின் கைத்தொழில் துறையின் தற்கால செயற்பாடுகள், கைத்தொழில் துறையில் இலங்கை  அடைந்துவரும் முன்னேற்றங்கள், எதிர்காலத்தில்  கைத்தொழில் துறையில்  முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் குறித்து விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் இருந்து பங்குபெறும் அமைச்சர்கள் மற்றும் கைத்தொழில் துறைசார் வல்லுனர்கள் பங்குபற்றும்  கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொள்ளவுள்ள அமைச்சர், இலங்கைக் கைத்தொழில் துறையில் முன்னெடுக்கப்படும், முன்னெடுக்க  உத்தேசிக்க பட்டிருக்கும் நவீன, தொழில்நுட்ப  வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதுடன் கைத்தொழில் துறைசார் மேம்பாடு குறித்தும் விஷேட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு - இலங்கைக்கு கடந்த காலங்களில் வழங்கிவந்த பல முக்கியத்துவமிக்க கைத்தொழில் துறைசார் உதவிகளுக்கும் இதன்போது  தனது விஷேட நன்றிகளையும் அமைச்சர் தெரிவிக்கவுள்ளார்.

குறிப்பாக இலங்கையில் மூங்கில் செயற்பாட்டுத் துறையிலும், உள்ளூர் ஆடை உற்பத்தித் துறையிலும் மற்றும் பல துறைகளிலும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு செயற்படுத்திவரும் விஷேட திட்டங்களுக்கும் இச்சந்தர்பத்தில் அமைச்சர் விஷேட நன்றிகளைத்  தெரிவிக்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top