ஐ.எஸ். போராளிகள் சிரியாவில்
மேலும் ஒரு எரிவாயு
வயலை கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு
ஐ.எஸ்
போராளிகள் மத்திய மாகாணத்தில் ஹோம்ஸ்சில் ஜகர் பகுதியில் உள்ள இரண்டாவது எரிவாயு வயலை அரசுபடையினருடன் போரிட்டு கைபற்றியுள்ளனர்
என அறிவிக்கப்படுகின்றது. ஐ.எஸ் போராளிகள் தங்கள் சமூக வளைதலத்தில் இது சம்மந்தமான
18 போட்டோகளை வெளியிட்டும் உள்ளனர். அதில் ஜகரில் ஐ.எஸ் இயக்க கொடி பறப்பது போலவும் மேலும் போரில் கைப்பற்றிய
வாகனங்களையும் படம் பிடித்து போட்டு உள்ளனர்.
ஈராக்
மற்றும் சிரியாவின்
சில பகுதிகளை
ஐ.எஸ்.
போராளிகள் கைப்பற்றியதோடு
தொடர்ந்து தாக்குதலில்
ஈடுபட்டு வருகிறார்கள்.
போராளிகளை ஒடுக்கும்
நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள்
தங்கள் படைகளை
ஈராக்கிற்கு அனுப்பி வான்வழியாக தாக்குதல் நடத்தி
வருகிறார்கள்.
தற்போது
இந்த தாக்குதலில்
கனடா இராணுவமும்
பங்கேற்று உள்ளது. இந்தநிலையில்
கனடா நேற்று
முதல்முறையாக போர் விமானங்களை ஈராக்கிற்கு அனுப்பி
வான்வழி தாக்குதல்
நடத்தியது. 2 சி.எப்.18 ரக போர்
விமானங்களை அனுப்பி ஐ.எஸ். போராளிகளை
குறி வைத்து
பலுஜா பகுதியில்
4 மணிநேரம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள்
பற்றிய விவரம்
உடனடியாக தெரியவில்லை
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு
நாடுகள் கூட்டாக
தக்குதலில் ஈடுபட்டாலும் ஐ.எஸ். போராளிகள்
தொடர்ந்து முன்னேறி
வருகிறார்கள் எனக் கூறப்படுகின்றது.
சிரியாவின்
3ல் ஒரு
பகுதி போராளிகள்
கட்டுபாட்டுக்கு வந்து உள்ளது. கடந்த அக்டோபர் மாதம்
30 ஆம் திகதி மிகப்பெரிய ஷார் எரிவாயு
வயலை கைப்பற்றினர்.
மேலும் .இன்று
ஜகர் கிராமத்தில்
உள்ள மக்ர்
எரிவாயும் நிலையத்ததையும்
கைப்பற்றினர் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment