உலக அலங்கார மீன் சந்தையில் தனக்கென்று
ஓர் இடத்தைப் பிடிக்க இலங்கை திட்டம்

ஊடகப் பிரிவு,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் அர்ப்பணிப்பான தொலை நோக்கின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அலங்கார மீன் தொழில் முனைவோருக்கு சர்வதேச சந்தைகளில் அணுகுவதற்கான பாதுகாப்பான புதிய தொழில்நுட்பங்களுடன் தகவல் மற்றும் சலுகைகள் வழங்குதற்கு அரசு தனது முழு முயற்சியினையும் கொண்டுள்ளது. உண்மையில், 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இலங்கையின் மீன்வளர்ப்பினை பாதுகாக்க இதற்கு முன் நிகழ்ந்திராத முயற்சிகளினை முன்வைத்துள்ளார். இந்த முயற்சி கிட்டத்தட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக எட்டப்பட்டுள்ளது.
இன்று(10) திங்கள் காலை கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற சர்வதேச அலங்கார மீன் வர்த்தக மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொணடு; உரையாற்றுகையிலேயே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்காண்;டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் வி டி எல் வசந்த பெரேரா,பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே,பிரதி கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் சரத் குணரத் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் அனுரசிறிவர்தன கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் டி.எம்.பி. திசாநாயக்க, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பந்துல எகோடகே, Nகுழுகுஐளுர்இயக்குனர் டாக்டர் அப்துல் பசீர், சர்வதேச அலங்கார மீன் வளர்ப்புத்துறை தலைவர் டாக்டர் ஜெரால்ட் பாஸ்லீர், .நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பெத் எஸ் ஃபோர்டு , அரசாங்க அதிகாரிகள் , சிறப்புமிகு உள்ளூர் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்ர் ரிஷாட் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: தெற்காசியாவினை உள்ளடக்கிய இலங்கையின் அலங்கார மீன் வர்த்தக மாநாடு இம்முறை முதல் தடவையாக இன்று கொழும்பில் இடம்பெறுகின்றதனை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிக்கின்றேன்.
இயக்குனர் டாக்டர் அப்துல் பசீர் மற்றும் சர்வதேச அலங்கார மீன் வளர்ப்புத்துறை தலைவர் டாக்டர் ஜெரால்ட் பாஸ்லீர் ஆகியோரின் தலைமையில் இலங்கை வந்திருக்கும் சர்வதேச, மீன்பிடித்துறை நிபுணர்களையும் வரவேற்கின்றேன். கொழும்பில் இன்று ஆர்வமாக நீங்கள் அனைவரும் சமூகமளித்திருப்பது இலங்கையின் அலங்கார மீன்வளர்ப்புக்கான சர்வதேச அங்கீகாரத்திற்கான ஒரு அடையாளத்திற்கு மட்டும் அல்ல நூற்றாண்டுகளுக்கு பழமையான மீன்பிடி மரபுகளில் ஒரு புதிய அத்தியாயத்துக்குமாகும்.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறும். தெற்காசியாவின் மீன் விற்பனைக்கான அலங்கார மாநாட்டுக்கு தெற்காசியாவின் அனைத்து வர்த்தக பொருளாதார மேதாவிகளும் இணைந்து ஓர் வர்த்தக பொருளாதார கலந்துரையாடலொன்றினையும் மேற்கொள்ளவுள்ளனர்.
மீன் உற்பத்தி பல தசாப்த காலம் தொட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இது கைத்தொழிலாளாக வளர்ச்சி அடைந்தது கடந்த நான்கு தசாப்த காலப்பகுதியிலாகும். கடல் மீன்பிடி தொழிலில் பெற்றுக் கொள்ளப்படும் முறைமையானது பொருளாதார ரீதியாக இலாபம் பெறக் கூடியதாகும்.அதேநேரம் அலங்கார மீன் வளர்ப்பு, இலங்கையர்களாகிய எமக்கு ஒரு புதிதான அம்சம் அல்ல. இது நாடு முழுவதும் பொதுவாக நடைமுறையில் காணப்படுகின்ற வீட்டு வளர்ப்பு பொழுதுபோக்காக காணப்படுகின்றது. மேலும் இலங்கையானது ஒரு வரலாற்று மீன்பிடி பாரம்பரியத்திiனை கொண்டுள்ளதுடன் அது நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி செல்கிறது. எனவே வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும், உணவு பாதுகாப்பு மற்றும் அந்நிய செலாவணி வருவாய் அடிப்படையில், அலங்கார மீன் உட்பட மீன்வளர்ப்பு துறையானது பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான பகுதியாக, அடையாளம் காணப்பட்டுள்ளது.
உண்மையில், இலங்கையில் 90 வகையான, நன்னீர் மீன் காணப்படுகின்றது, இதில் 50 வகையானவை இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றமை நன்கு தெரிந்த விடயமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பான தொலை நோக்கின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அலங்கார மீன் தொழில் முனைவோருக்கு சர்வதேச சந்தைகளில் அணுகுவதற்கான பாதுகாப்பான புதிய தொழில்நுட்பங்களுடன் தகவல் மற்றும் சலுகைகள் வழங்குதற்கு அரசு தனது முழு முயற்சியினையும் கொண்டுள்ளது. உண்மையில், 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் மீன்வளர்ப்பினை பாதுகாக்க இதற்கு முன் நிகழ்ந்திராத முயற்சிகளினை முன்வைத்துள்ளார். இந்த முயற்சி கிட்டத்தட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக எட்டப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வரவுசெலவுத்திட்டத்தின் முயற்சிகள் மத்தியில்,எங்கள் மீன்வளர்ப்பினை பாதுகாக்க, மொத்த மீன் உற்பத்தியில்; உள்நாட்டு மீன் உற்பத்தியை 20மூ அதிகரித்தல்,சிறிய நடுத்தர தொழில் முனைவோருக்கு உதவுதற்கான கடன் திட்டம். அவர்களின்; மீன் உற்பத்தி பண்ணைகள் விருத்தி செய்யவும் 1000 உள்நாட்டு மீன் விவசாய கிராமங்களில் உருவாக்கவும் நாரா (Nயுசுயு தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாம்) மீன் வளர்ப்பு மையங்கள் விரிவாக்கவும் 1.5 மில்லியன அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து, மற்றும் அலங்கார மீன் ஏற்றுமதியினை விருத்திசெய்ய 380,000 மில்லியன் அமெரிக்க டொலரும் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.
இதேவேளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அனுசரனையில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஆறு அலங்கார மீன் வளர்ப்பு ஊக்குவிப்புக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நன்னீர், கடல் நீர், மற்றும் உவர் நீரில், வரையிலான பலவிதமான அலங்கார மீன்களை இலங்கை வழங்க கூடியதாக உள்ளது.
இலங்கையில் வழக்கமான 40 ஏற்றுமதி நிறுவனங்கள், 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்ட உலக சந்தையில், 2.7 சதவீதம் பங்குகளினை வெற்றிகரமாக பெற்றுள்ளது.
இலங்கையின் வருடாந்த அலங்கார மீன் ஏற்றுமதி 41 சத வீதமாக அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் , 10.7 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அலங்கார மீன்களினை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. .2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ் ஏற்றுமதியானது 41 சத வீத ஒரு வலுவான அதிகரிப்பினை காட்டியுள்ளது.
நம்முடைய முதல் ஐந்து அலங்கார மீன்களினை பெற்றுக்கொள்பவர்களாக அமெரிக்க, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.அத்துடன் எங்கள் உற்பத்திக்கான முக்கியமான நம்பிக்கைக்குரிய புதிய உலக சந்தைகள் 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டன. இலாபகரமான மற்றும் நம்பிக்கைக்குரிய புதிய சந்தைகள் மத்திய கிழக்கு நாடுகளிருந்து வந்தன. கட்டார், ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலிருந்தே 2013 ஆம் ஆண்டு;, முதல் முறையாக எங்கள் அலங்கார மீன்;களுக்கான அவர்களது வலுவான கோரிக்கை அதிகரித்தது. 2013 ஆம் ஆண்டில், ஏனைய புதிய நம்பிக்கைக்குரிய, சந்தைகளாக சுவிச்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் தைவான் இருந்தன. கடந்த வருடம் 17 இலங்கை நிறுவனங்கள், சிங்கப்பூரில் இடம்பெற்ற சர்வதேச அலங்கார மீன் நிகழ்வில் மிக வெற்றகரமாக பங்கேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் அலங்கார மீன் ஏற்றுமதி உறுதியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
மொத்தம் 33 ஆயிரம் கோடி ருபாய் மதிப்புள்ள உலக அலங்கார மீன் சந்தையில் இந்தியாவின் பங்கு வெறும் 0.8 சதவீதம். சிறிய நாடான இலங்கையின் பங்கு 8 சதவீதம். எனவே இந்தியாவின் பங்கை 10 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலக அலங்கார மீன் சந்தையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. தற்போது அலங்கார மீன் சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ள இலங்கையை இந்தியா முன்மாதிரியாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த உலக நிகழ்வில், கிட்டத்தட்ட 30 விருதுகளை நாம் பெற்றிருக்கின்றோம். எங்களது இத்தொழில் துறைக்கு இன்றைய, சர்வதேச நிகழ்வு மற்றுமொரு மைல்கல்லாக இருக்கின்றது. ஒரு திருப்புமுனையாக திகழ்கின்ற இரண்டு நாட்கள் கொண்ட இன்றைய சர்வதேச அலங்கார மீன்வளர்ப்பு நிகழ்வை பொறுத்தவரை 300 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் தமது விரிவான அனுபவம் பகிர்ந்துக்கொள்வார் என நம்புகின்றேன.; நாளை, சர்வதேச பிரதிநிதிகளுக்கான விசேட தள விஜயம் ஒன்றினையும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினர் ஏற்பாடு செய்துள்ளமை விசேட அம்சமாக காணப்படுகின்றது. சர்வதேச பிரதிநிதிகள் வருகையினூடாக அரிய சர்வதேச வளைப்பின்னல் அமர்வுகளை ஏற்படுத்தி அந்நிய உதவிகளால் அனுபவங்களை பெற்றுக்கொள்ள உள்ளூர் தொழில் துறையினரை நான் துரிதப்படுத்துகின்றேன்.
இலங்கையின் வளர்ந்து வரும் அலங்கார மீன் வளர்ப்பு தொழில் துறையில் கூட்டு பங்காளிகளாக இணைந்துக்கொள்வதற்கு சர்வதேச அலங்கார மீன் வளர்ப்பு வர்த்தகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் இன்று இங்கே அவர்களுக்கு அழைப்பு விடுவிக்கின்றேன்.
இன்றைய நிகழ்வு முடிவில், எங்கள் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்பிடி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இறுதியாக, அனைத்து இணை அமைப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைஇ மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு இஐNகுழுகுஐளுர் சர்வதேச அலங்கார மீன் வளர்ப்புத்துறை ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச அலங்கார மீன்வளர்ப்பு நிகழ்வு நல்ல ஒரு அதிர்ஷ்ட நாளாகவும் ஒரு இனிமையான நாளாகவும் இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top