பிரதமர்
டி.எம் ஜயரத்ன
திருப்பதி கோவிலில் தரிசனம்
பிரதமர்
திஸ்ஸநாயக்க முதியன்சலாகே ஜயரத்ன நேற்று ஏழுமலையானை
தரிசனம் செய்தார்
என அறிவிக்கப்படுகின்றது.
பிரதமர்
டி.எம். ஜயரத்ன
நேற்று காலை குடும்பத்தினருடன் திருப்பதி சென்றடைந்தார். பின்னர் திருமலைக்கு
சென்று பத்மாவதி
விருந்தினர் இல்லத்தில் தங்கினார். பிரதமர் மற்றும்
அவரது குடும்பத்தினரை
அங்குள்ள கோவில் அதிகாரிகள் வரவேற்றனர்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர்
பிரதமர் பேட்டரி காரில் ஏழுமலையான் கோவிலுக்கு அழைத்துச்
செல்லப்பட்டார்.
காலை
11.15 மணியளவில் பிரதமர் டி.எம். ஜயரத்ன குடும்பத்தினருடன்
ஏழுமலையானை தரிசனம் செய்தார். அரைமணி நேரம்
கோவிலுக்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர் பின்னர் ரங்கநாயகர் மண்டபத்துக்கு
அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு
அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் அவருக்கு ஆசீர்வாதம்
வழங்கி லட்டு,
தீர்த்த பிரசாதங்களை
வழங்கினர். கோவில் அதிகாரிகள் அவருக்கு வெங்கடாசலபதி
உருவ படத்தை
வழங்கினர்.இதன்பின்
11.45 மணிக்கு வெளியே வந்த அவர் மீண்டும்
பத்மாவதி விருந்தினர்
மாளிகைக்கு சென்று தங்கினார். அதன்பின் திருமலையிலிருந்து
புறப்பட்டு சென்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment