முஸ்லிம் காங்கிரஸ்
அம்பாறை மாவட்டத்தில்
தனி நிர்வாக மாவட்டம் கோரி
முஸ்லிம்களைக் கடுப்பேற்றக்கூடாது
61 சதவீத தமிழ் பேசும்
மக்கள் தமது காரியங்களை
தமது சொந்த மொழியில் செய்து கொள்வதற்கான வசதிகளை
ஏற்படுத்துவதற்கு தமிழ் சமூகத்தையும் சேர்த்து
கோரிக்கைகளை
வென்றெடுக்க வேண்டும்
முஸ்லிம்களுக்காக
ஒரு தனி நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் கோருவதை விடுத்து அம்பாறை
மாவட்டத்தில் வாழும் 61 சதவீத தமிழ் பேசும் மக்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியில்
செய்து கொள்வதற்கு வசதியான கோரிக்கைகளை முன்
வைக்க வேண்டும். இதுவே தமிழ் சகோதரர்களின் ஒற்றுமையுடன் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான
வழியாக அமையும் என புத்திஜீவிகள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
நாட்டில்
தற்போது நிலவும் இக்கட்டான அரசியல்
சூழ்நிலையின் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தரப்பினால் முன்வைக்கப்பட்டிருந்த கரையோர
மாவட்ட கோரிக்கை
குறித்து அரசியல்
மட்டத்தில் பல கருத்துக்கள் வெளியாகி வரும்
நிலையில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில்
அம்பாறை மாவட்டத்தின் நிர்வாக நிலை குறித்து சரியான தரவுகளுடன் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு
விளக்கங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
அம்பாறை
மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பின்படி மொத்தமாக 648057 பேர் வாழ்கின்றனர்.
இவர்களில் 282484 பேர் (43.6%) தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள். 112750 பேர் (17.4%)
தமிழ் மொழி பேசும் தமிழர்கள். 251018 பேர் (38.7%) சிங்கள மொழி பேசும் சிங்களவர்கள்.
அம்பாறை
மாவட்டத்தில் 61 சதவீத தமிழ் பேசும் மக்கள் வாழும் இப்படியான நிலையில் இம்மாவட்டத்தின்
நிர்வாகம் அனைத்தும் சிங்கள மொழியில் இடம்பெறுகின்றது. கச்சேரி கூட தமிழ் மொழி பேசும்
மக்கள் வாழ்கின்ற இடத்தில் அல்லாமல் சிங்களப் பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது
இம்மாவட்டத்தில்
தமிழ் மொழி பேசும் ஒருவர் அரசாங்க அதிபராக
நியமிக்கப்படாமல் சிங்கள மொழி பேசும் ஒருவரே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வருகின்றார்.
பொத்துவில்,
கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களிலிருந்து தனிச் சிங்கள மொழி பேசும் அம்பாறை
நகரத்திற்குச் சென்று பல இன்னல்களுக்கு மத்தியில் தமது காரியங்களை தமிழ் பேசும் மக்கள்
முடிக்க வேண்டியிருக்கிறது.
இவைகளைக்
கருத்தில் கொண்டு இப்பிரதேச மக்களுக்கு தீர்வு காணப்படல் வேண்டுமே தவிர முஸ்லிம்களுக்காக
ஒரு தனி நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் தற்போதய அரசியல் சூழ்நிலையில்
காலத்தைக் கடத்திவிட்டு கோரிக்கை விடுப்பது என்பது தமது அரசியல் நோக்கத்திற்காக அம்பாறை
மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களைக் கடுப்பேற்றும் செயல்பாடு என புத்திஜீவிகளால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இது
மாத்திரமல்லாமல் மேற்கூறப்பட்ட நியாயங்களுக்காக தமிழர்களையும் இனைத்து குரல் கொடுப்பதை
விடுத்து கரையோர தனி நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்துமாறு கோரி தமிழர்களின் எதிர்ப்பையும்
சம்பாதிக்கக் கூடாது என்பதே தமிழ் பேசும் புத்திஜீவிகளின் கருத்தாகும்.
0 comments:
Post a Comment