கல்முனைப் பிரதேசத்தில்

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர்

 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீல அலை இளைஞர் படையணியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுகளில் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்டார்.
கல்முனை பிரதேசத்திற்கான பிரதான நிகழ்வு கல்முனைத் தொகுதி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த இளைஞர் மாநாட்டைத் தொடர்ந்து கல்முனைக்குடியில் அலுவலகம் ஒன்றையும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ திறந்து வைத்தார்.
அத்துடன் நற்பிட்டிமுனை, திருக்கோவில் தமிழ் பகுதியிலும் இளைஞர் மாநாடுகள் இடம்பெற்றன.


இந்நிகழ்வுகளில் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, பிரதி அமைச்சர் சரத் வீரசேகர, மக நெகும தவிசாளர் கிங்ஸ்லி ரணவக்க உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top