கரையோர மாவட்ட விவகாரம்
நாடாளுமன்றில் ஹரீஸ் ஆக்ரோசம்
தமிழ்,முஸ்லிம் மக்கள்
மொழிப் பிரச்சினையால் நிர்வாக
நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல முடியாமல்
கஸ்டப்படுகின்றார்கள்
என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக
அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவிப்பு
(எஸ்.எம்.அறூஸ்)
பொதுநிர்வாக
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதம் இன்று
நடைபெற்றது. இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.
ஹரீஸ் உரையாற்றினார்.
இன்று
அம்பாரை கரையோர
மாவட்டம் சம்பந்தமாக
நாட்டின் பிரதமரும்,
பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்னவும் தமது
பேச்சில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோன்று பல
அரசியல் கட்சிகளின்
தலைவர்களும் இதனை இனவாதக் கோரிக்கை என்று
தென்னிலங்கையில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்கின்றார்கள். உண்மையில் அம்பாரை கரையோர மாவட்டக்
கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி
உருவாக்கிய விடயமல்ல.
நாட்டை
எடுத்துக்கொண்டால் 1955ம் ஆண்டின்
20ம் இலக்க
நிர்வாக சட்டத்தின்படி
20 மாவட்டங்கள் இருந்தது.அதன் பின்பு மொனராகலை,
அம்பாரை, கிளிநொச்சி,
கம்பஹா, முல்லைத்தீவு
என்பன உருவாக்கப்பட்டன.இருந்தும் 1978ம்
ஆண்டு முன்னாள்
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால்
நியமிக்கப்பட்ட மொரகொட எல்லை நிர்ணயக்குழு அம்பாரை
கரையோரப் பிரதேசத்தில்;
வாழும் தமிழ்
மொழி பேசும்
மக்களுக்கு கரையோர மாவட்டம் உருவாக்குவதற்கான சிபார்சினை செய்திருந்தது.
அந்த
சிபார்சுக்கமைவாக அன்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட
இன்றுவரை கரையோர
மாவட்டத்தை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.
இதில்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் இந்த
அடிப்படையில்தான் கரையோர மாவட்டத்தை கோரி நிற்கின்றது.
அம்பாரையை எடுத்துக்
கொண்டால் 68 சதவிதம் தமிழ் பேசும் மக்கள்
வாழும் மாவட்டமாகும்.
அம்பாரை கச்சேரி
சிங்கள மயமாக
இருக்கின்றது. தங்களது நிர்வாக கடமைகளை செய்ய
முடியாமல் மிகவும்
கஸ்டப்படுகின்றார்கள்.
அம்பாரை
கரையோர பகுதியில்
வாழும் மக்கள்
தென்பகுதியில் வாழும் தமிழ்,முஸ்லிம்கள் போன்று
சிங்கள மொழியில்
பேசுகின்ற பரிட்சயம்
இல்லாதவர்கள் என்பதோடு முற்றாக சிங்களம் தெரியாதவர்களாகவும்
இருக்கின்றனர்.
எனவே,
இந்தப் பிரச்சினையை
நாட்டின் தலைவர்கள்
யதார்த்தமாகப் பார்க்க வேண்டும். இந்த யதார்த்தத்தை
பார்க்கத் தவறியதினால்தான்
அன்று கொல்வின்
ஆர்.டி.சில்வா நாட்டில்
சிங்கள மொழி
மட்டும் நிர்வாக
மொழியில்லாமல்,தமிழும் நிர்வாக மொழியாக இருக்கவேண்டும்
என்ற கருத்தை
முன்வைத்தார். அன்று அதை ஏற்றுக்கொள்ள தவறியமையினால்தான்
நாட்டில் பெரும்
யுத்தம் உண்டாகியது.
நாடு பல
இழப்புக்களைச் சந்தித்து ஈற்றிலே மாகாண சபைகள்
உருவாக்கப்பட்டது.
குறிப்பாக
அன்று மாகாண
சபைகள் ஏற்படுத்தப்பட்டபோது,
நாடு துண்டாடப்பட்டு
குட்டிச் சுவராக்கப்படுவதுடன்
பிரிவினைவாதம் தோற்றம் பெறும் என்று தீவிர
பிரச்சாரம் செய்தவர்கள் இன்று அதன் யதார்த்தத்தைப்
புரிந்து கொண்டுள்ளனர்.
அது மட்டுமல்ல
மாகாண சபைகளுக்கு
இன்னும் கூடுதலான
அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினையும்
முன்வைத்து வருகின்றனர்.
இன்று
அதேபோன்றுதான் அம்பாரை கரையோர மாவட்டத்தின் யதார்த்தத்தையும்
புரிந்து கொள்ளாமல்
இனவாதக் கருத்துக்களைப்
பரப்பி இனவாத
சாயம் பூசியுள்ளனர்.
. இது பிரிவினைவாதத்திற்கு
வழிவகுப்பதுடன் தனிநாட்டுக் கோரிக்கையாகவும்
சித்தரிக்க முற்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் அண்மையில்
ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடக்கவிருப்பதால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக
இவ்வாறு பேசுகின்றனர்.
குறிப்பாக
நாட்டின் பிரதமர்
அவர்கள் கரையோர
மாவட்டம் தொடர்பில்
பேசிய கருத்துக்களை
நான் வன்மையாகக்
கண்டிக்கின்றேன். வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் முஸ்லிம்கள்
மீதும், முஸ்லிம்
காங்கிரஸ் கட்சி
மீதும் பழி
போடுவதை ஏற்றுக்கொள்ள
முடியாது. இந்த
கரைNhர
மாவட்டத்தை சிபார்சு செய்தவர் பெரும்பான்மை இனத்தைச்
சேர்ந்த மொரகொட
என்பவர்தான் என்பதை பிரதமர் அறிந்திருக்க வேண்டும்.
இதை பிரதமர்
அறியாமல் அறிக்கை
விடுவது கவலைக்குரிய
விடயமாகும்.
அமைச்சர்
ஜோன் செனவிரத்ன
அவர்களே, நீங்கள்
கரையோர மாவட்டத்தைப்
பற்றிக் கூறிய
கருத்துக்கள் உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களா? அல்லது
அரசாங்கத்தினுடைய கருத்தா என்பதை இந்த சபைக்கு
தெரியப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். ஏன் என்றால் அரசாங்கம் கடந்த
இரண்டு வருடங்களுக்கு
முன்பு மாகாண
சபைத் தேர்தல்
முடிந்ததன் பின்னால் மாகாண ஆட்சியை அமைப்பதற்காக
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியோடு
உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
அதில்
அரசாங்கத்தின் ஐந்து சிரேஸ்ட முக்கிய அமைச்சர்கள்
பங்கு கொண்டனர்.
அமைச்சர்களான பசீல் ராஜபக்ஸ, நிமல் சிறிபால
டி சில்வா,
சுசில் பிரேமஜயந்த,
டளஸ் அழகப்பெரும,
மைத்திரிபால சிறிசேன ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ்
குழுவுடன் கரையோர
மாவட்டக் கோரிக்கை
நியாயமான கோரிக்கை
என்றும் மொழிப்பிரச்சினை
அந்த மக்களுக்கு
இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும்,
இரண்டு வருடத்திற்குள்
அதனை உருவாக்கித்
தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தனர்.
இப்படி
அரசின் நிலைப்பாடு
இருக்கும்போது அதற்கு எதிராக பேசியுள்ளீர்கள். இந்த விடயம் சம்பந்தமாக தெளிவான
பதிலை உங்களிடமிருந்து
எதிர்பார்க்கின்றேன்.
ஐக்கிய
தேசியக்கட்சி கரையோர மாவட்டம் சம்பந்தமாகவும் கருத்துக்களை
முன்வைத்துள்ளார். இதே ஐக்கிய
தேசியக் கட்சி
2003ம் ஆண்டு
ஆட்சியில் இருந்தபோது
ரணில் விக்கிரமசிங்க
அவர்களினால் 2003ம் ஆண்டு ஓகஸ்டில் அம்பாரை
கரையோர மாவட்டமும்,
குருணாகலில் நிகவரெட்டிய மாவட்டமும் உருவாக்குவதற்கு நடவடிக்கை
எடுப்பதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து அமைச்சரவை
அங்கீகாரம் வழங்ப்பட்டது. இந்த விடயத்தை அவர்கள்
புரிந்து கொள்ளவேண்டும்.
அடுத்தது
அனுரகுமார திஸாநாயக்க
அவர்களும் தனது
கருத்தைக் கூறியுள்ளார்.
கரையோர மாவட்டம்
இனவாத்தின் கோரிக்கையாகும் என்று அவர் கூறியுள்ளார்.
இனவாத்தின் கோரிக்கையல்ல அது மொழி ரீதியாக
கஸ்டப்படும் மக்களுக்கான கோரி;க்கையாகும் என்று
பேசிக்கொண்டிருக்கும்போது, மக்கள் விடுதலை
முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுந்து
நின்று குறுக்கிட்டு
நாங்கள் தமிழ்
இன ரீதியாகவோ,முஸ்லிம் இனரீதியாகவோ,சிங்கள இன
ரீதியாகவோ மாவட்டம்
ஏற்படுத்தப்படுவதை ஆதரிக்க முடியாது.
இது எமது
கட்சியின் கொள்கையாகும்.
ஆனால் மொழி
ரீதியான சிக்கல்களை
அம்பாரை கரையோர
மக்கள் அனுபவிப்பதை
நாம் அறிந்திருக்கின்றோம்
என்றார்.
பாராளுமன்ற
உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றும்போது,
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சி
முஸ்லிம் மாவட்டத்தைக்
கோரவில்லை. மொரகொட ஆணைக்குழு பரிந்துரை செய்த
கரையோர மாவட்டத்தையே
கோருகின்றோம். தமிழர்களும்,முஸ்லிம்களும் நிர்வாக ரீதியான
பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதுதான் அதன்
அர்த்தமாகும்.
இதன்
பிற்பாடு உரையாற்றிய
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் கோரிக்கைக்கு இணங்குகின்றேன்.
நியாயமான கோரிக்கையாகும்.
மொழி ரீதியில்
நிர்வாக செயற்பாட்டில்
அந்த மக்கள்
படும் கஸ்டங்களை
நானும் அறிந்திருக்கின்றேன்
என்றார். இவ்வாறு
அஸ்வர் எம்.பி. பேசிக்கொண்டிருக்கும்போது
அமைச்சர் ஜோன்
செனவிரத்ன அவசர
அவசரமாக சபையிலிருந்து
வெளியில் சென்று
அரசின் உயர்மட்டத்துடன்
பேசிவிட்டு மீண்டும் சபைக்குள் வந்தார்.
அமைச்சர்
தனது பதிலுரையில்
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களே, அம்பாரை
கரையோர மாவட்டம்
சம்பந்தமாக உயர்மடட்டத்துடன் கலந்து ஆலோசித்துள்ளேன். அங்கு கரையோரத்தில்; வாழ்கின்ற தமிழ்,முஸ்லிம் மக்கள்
மொழிப் பிரச்சினையால்
நிர்வாக நடவடிக்கைகளை
முன்கொண்டு செல்ல முடியாமல் கஸ்டப்படுகின்றார்கள் என்பதை நானும் அரசும் ஏற்றுக்
கொள்கின்றோம்.
எனவே,
இந்த நிர்வாக
சிக்கலுக்கு உரிய பொறிமுறைகளை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இன்று பொறிமுறையை
உருவாக்குவது சம்பந்தமாக உங்கள் தரப்போடு பேசவுள்ளோம்
என்றார்.
0 comments:
Post a Comment