நாய் வளர்ப்பவர்களுக்கு 74 சவுக்கடி, அபராதம்
ஈரானில் புதிய சட்டம்வருகிறது




ஈரான் நாட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு 74 சவுக்கடி தண்டனை வழங்க, சட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டம் மூலம் வீட்டில் நாய் வளர்ப்பதும், பொது இடங்களில் நாயுடன் உலா வருவதும் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில் நாய்கள் மிகவும் அழுக்கானவையாகக் கருதப்படுகின்றன. அதனால் ஈரானில் அவ்வளவாக நாய்கள் இல்லை. எனினும் சிலர் அங்கு தங்கள் வீடுகளில் இரகசியமாக நாய்களைச் செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள். சில செல்வந்தர்கள், தங்கள் நாயுடன் பொது இடங்களில் உலாவவும் செய்கிறார்கள்.

இதனால் இதற்கு முன்பு வரை இவ்வாறு பொது இடங்களில் நாயுடன் உலாவுபவர்களை அந்நாட்டின் கலாச்சாரக் காவலர்கள் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து வந்தனர். ஒரு சில சம்பவங்களில் அவர்களிடமிருந்து நாய்கள் பறிக்கப்பட்டன. தொலைக்காட்சி, இணையம் போன்ற மேற்கத்திய கலாச்சாரங்களில் நாய் வளர்ப்பதும் ஒன்று எனக் கருதி ஈரான் நாட்டின் ஆட்சியாளர்கள் இதைத் தடுக்க சட்டம் ஒன்றை ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் மூலம் நாய் வளர்ப்பவர்களுக்கு 74 சவுக்கடிகள் அல்லது 10 மில்லியன் முதல் 100 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top