தலைவர் ஹக்கீம்,செயலாளர் ஹசன்அலி இடையிலான முறுகல்
அரசாங்கத்திற்கு மு.கா சிவப்புக் கொடி காட்டுவதற்கான சமிஞ்சையா..??
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
ஜனாதிபதித்
தேர்தலில் மு.கா யாரை?
ஆதரிப்பது என்பதில்
மிகப் பெரிய
சாவாலை எதிர்
கொண்டு வருகிறது.இவ் அரசாங்க
ஆட்சிக் காலத்தில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கெதிரான
செயற்பாடுகள் காரணாமாக முஸ்லிம்கள் தற்போதைய அரசின்
மீது வெறுப்படைந்துள்ளதனால்,அரசை ஆதரிப்பது
தங்கள் தலை
மீது தாங்களே
மண்ணை அள்ளிக்
கொட்டும் செயலாய்
அமைந்துவிடும் என்ற காரணத்தினாலும்,அரசின் செயற்பாடுகளை
பொருந்திக்கொள்ள முடியாமையினாலும் அரசை விட்டு மு.கா வெளியேற
வேண்டும் என்பதில்
மு.கா
உறுப்பினர்கள் பலர் உறுதியாக உள்ளனர்.இவ்
விடயத்தில் மிகவும் உறுதியாகவும் உள்ள ஒருவர்
தான் மு.கா கட்சியின் செயலார்
நாயகம் ஹசன்
அலி அவர்கள்.
மு.கா கட்சியின் செயலாளர்
நாயகத்தைப் பொறுத்த வரை அவர் அன்று
தொடக்கம் இன்று
வரை அரசிற்கு
மாற்றமாக கொள்கையிலேயே
உள்ளார். கட்சி
பிளவடையாது பாதுகாக்க,ஐ.தே.க இனது இயலாமைகளினாலேயே
அவர் அரசாங்க
பக்கம் மு.கா செல்ல
சம்மதித்தார் எனக் கூறினாலும் மிகையாகாது.
அமைச்சர் ஹக்கீமைப்
பொறுத்த மட்டில்
முஸ்லிம்களிடத்தில் சென்று ஜனாதியை
திட்டித் தீர்த்தாலும்
பகிரங்க அறிக்கைகள்
மூலம் ஜனாதிபதியை
எதிர்க்கும் போக்கை கடைப்டிப்பதில்லை.ஆதரிக்கும் போக்கையே
கடைப்பிடிப்பார் என்றாலும் தவறில்லை என்றே கூற
வேண்டும்.அதற்கும்
ஓரிரு நியாயமான
காரணங்கள் இருக்கத்
தான் செய்கின்றன.
தங்களது
பிள்ளை பிழை
செய்யும் போது
தாய் அப்
பிள்ளையை கடுமையான
தொனியில் கண்டித்தால்,தந்தை அப்
பிள்ளையை சற்று
அரவணைக்க வேண்டும்.
தந்தை கடுமையான
தொனியில் கண்டித்தால்
தாய் அப்
பிள்ளையை சற்று
அரவணைக்க வேண்டும்.அதுவே கண்டித்தலால்
அப் பிள்ளை
விரக்தியுறாது உளவியல் தாக்கங்களில் இருந்து விடுபட
நல்லதொரு வழி
முறையாகும்.இது போன்றே செயலாளர் நாயகம்
ஹசன் அலி
கண்டிக்கும் போக்கைக் கடைபிடிக்கிறார்.தலைவரோ ஆதரிக்கும்
போக்கைக் கடைப்பிடிக்குகிறார்
எனலாம்.
தற்போது
ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் தலைவருக்கும் செயலாளருக்கும்
இடையில் முரண்பாடுகள்
தோன்றியுள்ளதாக அறிய முடிகிறது.இவர்களினது முரண்பாட்டினால்
விளைவாக்கப்படக்கூடிய விளைவின் எதிர்வு
கூறலை கடந்த
கால வரலாறுகளிலிருந்து
யூகித்துக் கொள்ளலாம்.
மு.கா இலங்கை
மக்களிடம் பல
வருடமாக நிரூபிக்கத்
தவறிய தனது
பலத்தை நிரூபிக்க
கிழக்கு மாகாண
சபையில் தனித்துக்
கேட்பதே சிறந்த
வெற்றி வியூகமாக
இருந்தது.கிழக்கு
மாகாண சபைத்
தேர்தலின் போது
மு.கா
தனித்து போட்டி
இட வேண்டும்
என பலரும்
தங்கள் கருத்துக்களைத்
தெரிவித்து வந்த போதிலும் அரசு தனது
வெற்றி வாய்ப்பை
உறுதிப்படுத்திக் கொள்ள தங்களோடு இணைந்து கேட்க
வேண்டும் என்பதில்
மு.கா
இற்கு அழுத்தம்
பிரயோகித்து வந்தது.
அந்த
நேரத்தில் அம்பாறை
கச்சேரி சென்று
வேட்பு மனுத்தாக்கல்
செய்வதற்கான பத்திரத்தை வாங்கி வந்து மு.கா கிழக்கு
மாகாண சபையில்
தனித்து கேட்க
உடன்படா விட்டால்
செயலாளர் ஹசன்
அலி தலைமையிலான
ஒரு குழு
கிழக்கு மாகாண
சபையில் தனித்து
களமிறங்கும் என மு.கா தலைமை
இற்கு ஒரு
எச்சரிக்கையை விடுக்கும் வண்ணம் ஒரு செய்தியை
விடுத்தது.அமைச்சர்
ஹக்கீம் தலைமையிலான
மு.கா
பிரிவினைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள
வேறு வழி
இன்றியே தனித்தே
கேட்கிறது என்ற
நிலைமை உருவாகியது.
அரசிடம்
நல்லை பிள்ளை
போன்று அமைச்சர்
ஹக்கீம் நடித்துக்
கொண்டு அரசுடன்
முரண்படா வகையில்
இப் பிரச்சனையைக்
கையாள இது
மு.கா
இனரால் திட்டமிடப்பட்டு
மேற்கொள்ளப்பட்ட சிறந்த அரசியல் காய் நகர்த்தல்
என்றே கூற
வேண்டும்.
மு.கா ஹசனலியை
வைத்து இது
மாத்திரமல்ல பல காய் நகர்த்தல்களை செய்துள்ளது.ஜெனீவாவில் அரசிற்கு
எதிராக பிரேரணை
கொண்டு வரப்பட்ட
போது மு.கா இனுடைய
செயலாளர் நாயகம்
ஹசன் அலி
அரசிற்கு எதிரான
காரசாரமானதொரு அறிக்கையை மனித உரிமை ஆணையாளர்
நாயகம் நவநீதம்
பிள்ளையிடம் ஒப்படைத்திருந்தார்.இவ் விடயத்தில் ஜனாதிபதி
இற்கும் அமைச்சர்
ஹக்கீமிற்குமிடையில் முரண்பாடு தோற்று
விக்கப்பட்டது.அமைச்சர் ஹக்கீமோ,இதனை தான்
வழங்க வில்லை
எனவும் ஹசன்
அலியே வழங்கினார்
என தப்பித்துக்
கொண்டார்.
வெளிப்
பார்வையில் தலைவர் ஹக்கீமிற்கும் செயலாளர் ஹசனலி
இற்குமிடையில் முரண்பாடு இருப்பது போன்று தோன்றினாலும்
நன்கு ஆராய்ந்து
பார்த்தால் இவர்கள் இருவருக்குமிடையில்
எது வித
முரண்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை.உண்மையில் தலைவருக்கு
கொடுத்தது தெரியாவிட்டால்
இருவரும் முரண்பட்டிருக்க
வேண்டுமல்லவா? அதுவே தலைமைத்துவத்த்திற்கும்
அழகும் கூட.தனக்கு தெரியாது
என கூற
தலைமைத்துவம் வெட்கப் பட்டிருக்க வேண்டுமல்லவா..??தெரிந்து
கொண்டு தெரியாது
எனக் கூறும்
போது ஏன்
வெட்கிக்க வேண்டும்?சமூகத்திற்காய் தன்னைத்
தானே தாழ்த்திக்
கொள்வது தலைமைத்துவ
அழகும் கூட
அல்லவா?
அமைச்சர்
ஹக்கீம்,அமைச்சர்
பசீர் சேகு
தாவூத் இற்குமிடையிலான
முரண்பாடுகள் பல தடவை சந்திக்கு வந்துள்ளது.பிரச்சனையைத் தீர்க்க
நடுவர்கள் வந்த
சந்தர்ப்பமும் உண்டு.இது போன்ற ஒன்று
கூட இவர்கள்
இருவருக்குமிடையில் சந்திக்கு வராமையே
இவர்களின் ஆழாமான
காய் நகர்த்தலுக்கு
ஆதாரமாய் கூறிடலாம்.
அரசிற்கு
அமைச்சர் ஹக்கீம்
நல்ல பிள்ளை
போல் நடித்துக்கொண்டு
அரசிற்கு எதிரான
வேலைகளை செய்ய
மு.கா
ஹசன் அலியை
பயன்படுத்துகிறது என்றே கூற வேண்டும்.
அவ்வாறானதொரு
தொனியில் இதனையும்
பார்த்தோமேயானால் அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியின் கோபப்
பார்வையில் இருந்து தப்பித்துக் கொண்டு அரசிலிருந்து
வெளியேறுவதற்கான ஒரு சமிஞ்சையாகவே இதனைப் பார்க்க
வேண்டும். அரசியில்
யாரும் நிரந்தர
எதிரியும் இல்லை
நண்பனும் இல்லை. கழித்த கல்
நாளை கட்டடம்
கட்ட உதவினாலும்
உதவுமல்லவா?இப்போதே சிறந்த வியூகம் வகுத்து
அதனைப் பேணி
பாது காப்பதும்
சிறந்த காய்
நகர்த்தலும் கூட.
சம்மாந்துறை
இலங்கை
0 comments:
Post a Comment