இனவாதத்தை விதைக்க வேண்டாம்

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி சார்பாக

- MC. அஹமட் புர்கான்


கடந்த 2012ம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் வெற்றியின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் அராசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நிறுவுவதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் ஒன்றாக கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை அரசு நிறைவேற்ற மறுத்தமையைத் தொடர்ந்து  முஸ்லிம் காங்கிரஸ் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை பரப்பி வருகின்றமை ஆராக்கியமான தொன்றல்ல இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் கிழக்கு மாகாண சமூக பொருளாதார அபிவிருத்தி குழுத் தலைவரும் கட்சியின் உயர்பீட  உறுப்பினருமான MC. அஹமட் புர்கான் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைக் காலமாக நாட்டின் பல பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் மீதான வண்முறைகளை கருத்தில் கொள்ளாது, இவர்களின் கட்சி சார்ந்த  விமர்சனமானது கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அறிக்கைகள் விடப்பட வேண்டும். அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் சிலரால் வெளியிடப்பட்ட  அறிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் தான் முஸ்லிம்கள் வாழுகின்றார்கள் என்பதைப் போல் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள். ஆனால் இக் கருத்துக்களால் கிழக்கிழங்கைக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களின் இருப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமையை உறுவாக்கி விடும் என்பதை இவர்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள  வேண்டும். அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கும் இவர்கள் அரசை விமர்சித்து தமது பம்மாத்து  அரசியல் காய்நகர்த்தல்களால், மீண்டும்  பேரினவாத தீய சக்திகளின் அட்டகாசம் தொடர்ந்தும் முஸ்லிம்களின் மீது அரங்கேறுவதை அனுமதிக்க முடியாது.

காற்றுள்ள போது தூத்திக் கொள்ளாமல் காலம் கடந்து அரசை தூற்றுவதாக அமையும்  இவர்களின் சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகள்  மேலும் மேலும்  முஸ்லிம்களின் இருப்பை, பாதுகாப்பை கேள்விக்குறியாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top