நாடாளுமன்றத்தில்
128 உறுப்பினர்களை வைத்திருக்கும்
கட்சியின்
தலைவன் நான்தான்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிப்பு
நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மையைக் கொண்ட கட்சியின் தலைவரான நான் இப்போது வெளியே இருக்கிறேன். ஆனால்
நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாத ஒருவர் இப்போது பிரதமராகப்
பதவியேற்றிருக்கிறார். என முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தங்காலை
'கால்ட்டன் ஹவுஸ்' இல்லத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றும்
போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர்
மேலும் தெரிவித்திருப்பதாவது,
நான்
நாட்டைவிட்டுத் தப்பியோடமாட்டேன். இங்குதான்
இருப்பேன். நான் எனது நாட்டையும் எனது
மக்களையும் நேசிக்கிறேன். ஆகவே இதுதான் எனக்கு
புகலிடம்.வேறு
எங்கும் செல்லமாட்டேன் நாடு ஒரு மாற்றத்தை
வேண்டுகிறது என்று கூறினார்கள். அதற்குத் தானே
நீங்கள் வாக்களித்துள்ளீர்கள்,
அதைத்தான் கொடுத்தீர்கள்.
ஆகவே இப்போது
மாற்றம் வந்துள்ளது
என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். நான்
ஆட்சியை விட்டுப்
போனாலும் கட்சியை
விட்டுப் போகமாட்டேன். நாட்டைவிட்டு
ஓடிவிடுவேன், ஆகவே விமானத் தளத்தை மூடவேண்டும்,
காவல் போடவேண்டும்
என்றெல்லாம் பரப்புரை செய்தார்கள். நான்
நாட்டைவிட்டுத் தப்பியோடமாட்டேன். இங்குதான்
இருப்போன். எனது நாட்டையும் எனது மக்களையும்
நேசிக்கிறேன். ஆகவே இதுதான் எனக்கு புகலிடம்.
வேறு எங்கும்
செல்லமாட்டேன். உங்களுக்குத் தெரியும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட கட்சித் தலைவர்தான்
பிரதமராகவேண்டும். நாடாளுமன்றத்தில்
128 உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சியின்
தலைவன் நான்தான்.
நான் இன்று
வெளியே இருக்கிறேன்.
ஆனால் அறுதிப்
பெரும்பான்மை பெற்றிராத கட்சியின் தலைவர் பிரதமராகியுள்ளார்
என அவர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment