ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இன்று நாட்டு மக்களுக்கு  விஷேட உரை



இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இன்று பிற்பகல் 2 மணிக்கு கண்டி, எண்கோண மண்டபத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.   காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து கார் பவனியாக அத்தனகலவுக்கு ஜனாதிபதி புறப்பட்டு சென்றுள்ளார்.

அங்கு, பண்டாரநாயக்கவின் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு தலதா மாளிகையைச் சென்றடைவார். பிற்பகல் 2 மணிக்கு கண்டியிலுள்ள எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top