மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர்.ஏ. சிறிசேன வேறு 

திட்டமிட்ட சதிக்கு மக்கள் பலியாக வேண்டாம்

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் 


எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேறு,ஆர்.. சிறிசேன வேறு மோசடிகாரர்களின் திட்டமிட்ட சதிக்கு மக்கள் பலியாக வேண்டாம் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  
மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்கவேண்டும்.   ஆர். . சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி, மூக்குகண்ணாடி அணிவித்துபவுடர் பூசி அலங்கரித்து, படம் பிடித்து, அந்த படத்தை தமிழ் ஊடகங்களில் விளம்பரமாக போட்டுஅப்பாவி தமிழ் மக்களை குறி வைத்து ஏமாற்றும் ஒரு தில்லாலங்கடி வேலையை மஹிந்த  அரசின் முகவர்கள் சிலர் செய்கிறார்கள் என கட்சி ஊடக செயலகம்  மூலம் விடுத்துள்ள விசேட செய்தி அறிவித்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.   
மனோ கணேசன் மேலும் இது குறித்து குறிப்பிடுகையில்

 ஆர். . சிறிசேன என்ற வேட்பாளரின் சின்னம், கொடி சின்னமாகும். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னம்,அன்னப்பறவை சின்னமாகும். ஊடகங்களில் விளம்பரம் செய்து மக்களை குழப்ப முயல்கின்றது.     மேலும் அரசாங்கம் இன்னொரு சதியையும் செய்கிறது. மாதிரி வாக்குச்சீட்டு ஒன்றை அச்சடித்து தமிழ் மக்கள் மத்தியில் விநியோகம் செய்துள்ளது. இந்த மாதிரி வாக்குச்சீட்டில், எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னமாக, கொடி  சின்னம் காட்டப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு மக்களை குழப்பும் ஒரு வெட்கங்கெட்ட மோசடி நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.     இத்தகையை வாக்குசீட்டு குறிப்பாக வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் தமிழ் மக்கள் வாழும்  பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தோல்வியின் விளிம்பில் நின்றுக்கொண்டு மஹிந்த ராஜபக்ஸ அணி செய்யும் இந்த மோசடி வேலையை தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.   உண்மையான வாக்குசீட்டில், எமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் தமிழ், சிங்கள மொழிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரது பெயருக்கு இடதுபுறம் அவரது சின்னமான, அன்னப்பறவை அச்சிடப்பட்டிருக்கும். ஒட்டு மொத்த பத்தொன்பது வேட்பாளர்களின் பெயர் வரிசையில் எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பத்தாவதாக இடம்பெற்றுள்ளது.   இவை பற்றிய  உண்மை தகவல் தொடர்பில் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் தங்கள் உறவினர்களுக்கு ,நண்பர்களுக்கு அயலவர்களுக்கு நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ எடுத்துகூறி தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top