பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
ஐ.தே.க யினரால் தேடுதல் வேட்டை.





பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கட்டத்தில் பூட்டப்பட்டு கிடக்கின்ற நான்கு அறைகளை திறந்து சோதனைகளை நடத்துமாறு எதிரணியினர், பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பூட்டப்பட்டிருக்கின்ற நான்கு அறைகளில் பெருந்தொகையான வாக்குச்சீட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் எதிரணியினர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது. மண்டப வளாகத்துக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரிய,ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அத்துரலிய ரத்னதேரர் அங்கிருக்கும் பொலிஸாரிடமே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் கொழும்பு – 07 இலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top