எனது நற்பெயருக்கு இழுக்கு
தேர்தல்கள் ஆணையாளருக்கு சஜித் பிரேமதாஸ அவசர கடிதம்
ஐக்கிய
தேசியக் கட்சியின்
பிரதித் தலைவர்
சஜித் பிரேமதாஸ
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தன்னுடைய
அரசியல் நற்பெயருக்கு
இழுக்கு ஏற்படும்
வகையில் முன்னெடுக்கப்படவுள்ள
செயற்பாட்டை நிறுத்துமாறு கோரியே சஜித் பிரேமதாஸ
இக் கடிதத்தை
அனுப்பி வைத்துள்ளார்.
நான்
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக நேர்மையான முறையில்
செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒருபோதும் அரசியல்
வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனால் கடந்த சில
தினங்களாக ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணியில் நான் இணைந்து கொள்ளவுள்ளதாக இணையங்கள் மற்றும்
ஊடகங்கள் மூலம்
பொய்ப் பிரசாரம்
முன்னெடுக்கப்படுகிறது. இது மைத்திரிபால சிறிசேனவின்
வெற்றியைத் தடுப்பதற்கான முயற்சியாகும்.
தேர்தல் பரப்புரைகள்
நிறைவு பெற்றுள்ள
நிலையில் மோசடித்
திட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. நான்
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு
அளிப்பதாகவும் அதனால் அன்னப்பறவை சின்னத்திற்கு வாக்களிக்க
வேண்டாம் எனவும்
கோரி என்னுடைய
பெயரை பயன்படுத்தி
அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாடு முழுவதும் சுவரொட்டிகள்
ஒட்டுவதற்கு சூழ்ச்சி செய்யப்படுகிறது. இந்த
சூழ்ச்சி மூலம்
எனது அரசியல்
வாழ்க்கைக்கும் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் ஏற்படும்
பாதிப்பை கருத்திற்
கொண்டு இந்த
சூழ்ச்சித் திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும்
என்றும் அவ்வாறு
இல்லாவிடின் இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வாய்ப்பு
அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று சஜித்
பிரேமதாஸ தனது
கடிதத்தில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment