புதிய ஜனாதிபதி மைத்திரிக்கு
இந்திய ஜனாதிபதி
வாழ்த்து
ஜனாதிபதியாகத்
தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டிவிட்டர்
இணைய தளத்தில்
வாழ்த்து செய்தியை
பகிர்ந்துள்ள இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எதிர்வரும்
ஆண்டுகளில் இருதரப்பு
உறவுகளை மேலும்
பலப்படுத்த இரு நாடுகளும் தொடர்ந்து
இணைந்து பணியாற்றும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: - “ இலங்கை ஜனாதிபதியாக
மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையின் வளர்ச்சி
மற்றும் அமைதி
மக்களின் முன்னேற்றம்
மற்றும் செழிப்புக்கு
மேற்கொள்ளப்படும் பெரும் முயற்சிகள் வெற்றி பெற
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment