கடைசி உரையுடன் விடைபெற்றார்
முன்னாள் ஜனாதிபதி
கண்ணீர் மல்க அனுப்பி வைத்த அமைச்சர்கள்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேசேனவின் நல்ல
திட்டங்கள் அனைத்துக்கும் தொடர்ச்சியாக ஆதரவளிப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள
ஜனாதிபதி
செயலகத்தில் விஷேச கூட்டம் இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் முன்னிலையில்
மஹிந்த
ராஜபக்ஸ பேசுகையில்,
எந்தவிதமான முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல். அமைதியை கடைபிடிக்குமாறு அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
புதிய ஜனாதிபதி மைத்திரியின் நல்ல
திட்டங்கள் அனைத்துக்கும் தொடர்ச்சியாக ஆதரவளிப்பேன் என்றும், உடன்பாடு இல்லாத திட்டங்களுக்கு எதிராக மட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவியை துறந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தொடர்ந்து கடமையாற்றப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றிய போது பெரும்பாலான அமைச்சர்கள் கண் கலங்கினர். அதன் பின்னர் அமைச்சர்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ஸ , ஜனாதிபதி மாளிகையின் பணியாளர்களையும் சந்தித்து பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment