கடத்தியவர்களிடம் இருந்து செல்போனில் பேசி தப்பித்த குழந்தை
புத்திக்கூர்மையையுடன் செயல்பட்ட குழந்தைக்குப் பாராட்டு 



அமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை டே கேர் மையத்தில் விட்டு வர சென்றார். அவ்வாறு செல்லும் போது கார் சாவியையும் அவர் எடுத்து செல்லவில்லை. அவர் டே கேர் மையத்துக்குள் நுழைந்து குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வெளியே வந்தபோது காரை யாரோ ஓட்டிச்செல்வதை பார்த்தார். அவர் ஓடி வருவதற்குள் கார் பறந்து சென்றது. குழந்தையும் காரில் உள்ளதே என்று பதைபதைத்த அவர் திரும்பவும் டே கேர் மையத்துக்குள் சென்று அவசர பொலிஸ் எண் 911- தொடர்பு கொண்டார். தனது குழந்தையும், காரும் கடத்தப்பட்டதாக பொலிஸாரிடம் அவர் தெரிவித்தார்.
காருக்குள் தனது செல்போனும் இருப்பதாக அவர் பொலிஸாரிடம் கூறினார். உடனடியாக எலிசபெத்தின் செல்போன் எண்ணுக்கு பொலிஸார் தொடர்பு கொண்டனர். குழந்தை எய்டன் போனை எடுத்து பொலிஸாரிடம் பேசினான். காரை ஓட்டிவந்த நபர் வெளியே சென்றுள்ளதாக அவன் பொலிஸாரிடம் கூறினான். உடனே சமயோகிதமாக செயல்பட்ட பொலிஸார், எய்டனிடம் காரில் உள்ள ஹாரனை தொடர்ந்து அழுத்திக்கொண்டிருக்கும் படி கூறினர்.

இந்த தகவலை அப்பகுதியில் உள்ள ரோந்து பொலிஸாரிடமும் காவல் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கூறினார். அவர்கள் விரைந்து செயல்பட்டு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த ஹாரன் சத்தத்தை வைத்து எய்டனையும், காரையும் மீட்டனர். 45 நிமிட இடைவெளியில் குழந்தையை தன்னிடம் சேர்ந்த காவல்துறையினருக்கு எலிசபெத் கைகூப்பி நன்றி கூறினார். அதே சமயத்தில் குழந்தையின் புத்திக்கூர்மையையும், அவனது செயல்பாட்டையும் காவதுறையினர் பாராட்டியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top