மேர்வின் (Part 2 )அரசியலை பூண்டோடு ஒழிப்போம்
புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம்.........
ஆயிஷா கன்னா
புத்தளம்
மேர்வின் Part 2 பாயிஸும், அக்கரைப்பற்று மேர்வின் Part 2 அதாவுல்லாவும்,
காத்தான்குடி மேர்வின் Part 2 ஹிஸ்புல்லாவும்,
முழு முஸ்லிம்
மக்களுக்கு துரோகம் செய்தவர்கள்,
மஹிந்தவின்
ஆட்சியில் முஸ்லிம்களுக்கு
எவ்வளவோ அநியாயம்
நடந்தும், இஸ்லாத்துக்கு
BBS மூலம் கேவலபடுத்தியும்
இருந்த போது
மஹிந்த புராணம்
பாடியவர்கள்,
மஹிந்த
செய்யும் முஸ்லிம்
எதிர்ப்பு சம்பவங்களுக்கு
அந்நிய அரசியல்
வாதிகள் குரல்
கொடுக்கும் போதும் கூட ரோசம் இல்லாமல்
மஹிந்தவுக்கு ஆமாம் சாமி போட்டவர்கள்,
முதுகெலும்பு
இல்லாத இந்த
சுய நல
அரசியல்வாதிகள் தங்களுடைய சொகுசு வாழ்க்கைக்கே முதலிடம்
கொடுத்தவர்கள், தங்களுடன் இருக்கும் கவாலிகள், கடைபுளிகள்,
காட்டுமிராண்டிகள் மூலம் காடைத்தனமும்,
சண்டித்தனமும் தான் அரசியலுக்கு முக்கியம் என்று
காட்டி "சாக்கடை அரசியல் கலாச்சாரத்தை" உருவாக்கியவர்கள் ,
தங்களுடன்
இருக்கும் கவாலிகள்,
கடைபுளிகள், காட்டுமிராண்டிகள் மூலம் புத்திஜீவிகளை அடித்தவர்கள்,
உலமாக்களை தூற்றியவர்கள்,
தங்களுக்கு
மஹிந்தவினால் கொடுத்த அதிகாரங்களை வைத்து துஷ்பிரயோகம்
செய்தவர்கள், "நான்" என்ற அகங்காரம்,
பெருமை,
திமிர்
பிடித்த இவர்களின் இழிவான செயல்களை யாரும்
தட்டி கேட்க
முடியாது,
கல்யாண
வீட்டில் நான்தான்
மாப்பிள்ளை, மைய்யத்து வீட்டில் நான்தான் மைய்யத்து
என்று கர்வம்
கொண்டவர்கள்,
தேர்தலின்
இறுதி பகுதியில்
கூட, எல்லா
முஸ்லிம்களும் ஓற்றுமையாக நீதிக்காக மைத்திரி பக்கம்
ஒரே அணியில்
இருக்கும் போது
கூட திருந்தாத ஜென்மங்கள்,
தேர்தல்
காலபகுதியில் மைத்திரியையும், முஸ்லிம்களையும்
தாறு மாறாக
தூற்றிய இவர்கள்
மஹிந்த புராணம்
பாடியவர்கள்,
தேர்தல்
அன்று கூட
முஸ்லிம்களை வாக்கு சாவடிக்கு போக முடியாது
தடுத்த பாவிகள்,
இப்போது
தேர்தலில் படுதோல்வி
அடைந்த பின்னர்
தங்களுடைய அரசியல்
பிழைப்பை செய்வதற்காக
வெட்கம்,
சூடு,
சொரணை
இல்லாமல் அரசியல்
பிச்சை கேட்டு
வருகிறார்கள்...
இவர்களுடைய
வெட்கம் கெட்ட
அரசியல் மாயத்தில்
விழுவதற்கு மக்கள் ஒன்றும் போரம்போக்குகளோ மானம்
கெட்டவர்களோ இல்லை.
மக்கள், கேடு கெட்ட இந்த அரசியல் கலாச்சாரத்தில் இருந்து வெறுத்து போய் உள்ளனர் இனி பண்பாடுள்ள முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் நேசிக்கும் புதிய தலைமுறையினரை எதிர் வரும் தேர்தலில் இறக்குவது திண்ணம்
0 comments:
Post a Comment