ஆட்சியில் நீடிக்க மஹிந்த ராஜபக்ஸ சதி செய்தாரா?
விசாரணைக்கு புதிய அரசு உத்தரவு!


ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது மஹிந்த ராஜபக்ஸ சதித்திட்டம் தீட்டியது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று புதிய அரசு தெரிவித்துள்ளது. கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய அரசின் செய்தித் தொடர்பாளர் மங்கள சமரவீர இதனை  தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைக்க மறுத்ததால் மஹிந்தவின் சதித்திட்டம் வெற்றி  பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
பதவியை தக்க வைக்க முன்னாள் ஜனாதிபதி தீட்டிய சதித்திட்டம் குறித்து விரிவாக விசாரிக்க புதிய அமைச்சரவை உத்தரவிடும் என்றும் அவர் தெரிவித்தார்தோல்வி உறுதி என தெரியவந்ததையடுத்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி இராணுவ புரட்சி மூலம் ஆட்சியை தக்க வைக்க ராஜபக்ஸ  முயன்றதாக   தகவல்கள் வெளியாகின.
ஆனால் சதித்திட்டம் நிறைவேறாததால் வேறு வழியின்றி ராஜபக்ஸ தமது தோல்வியை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக  நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள்மஹிந்த ராஜபக்ஸவை வலியுறுத்தியதும்  குறிப்பிடத்தக்கது.
   இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸவின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயக , இது ஆதரமற்ற குற்றச்சாட்டு என மறுத்துள்ளார். இவர்கள் கூறும் எத்தகைய காரியங்களிலும் ராஜபக்ஸ இறங்கவில்லை என்று தெரிவித்துள்ளார் . உண்மையில் ஜனவரி 9 அன்று அதிகாலை 3.30 மணியளவில் வாக்கு எண்ணப்பட்டிருக்கும்போதே ராஜபக்ஸ  தனது முடிவு எண்ணவாக இருக்கும் என தீர்மானித்துவிட்டதாக பி.பி.சி கூறியதை மேற்கோள்காட்டி அவர் பேசினார்.அதிகாரத்தை கைமாற்றும் வேலைகளை மென்மையாகவே செய்யும்படி ராஜபக்ஸ அறிவுறுத்தினார். அரசியல்வாதிகளால் வழக்கமாக சொல்லப்படும் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 1962-ல் நட்ந்த தேர்தலுக்கு இராணுவ ஆட்சி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அங்கு இதுவரை இராணுவத் தலையீடுகள் இல்லாமலேயே அரசியல் அரங்கேற்றம் நடந்துள்ளது.
2010 இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சஸவை எதிர்த்து போட்டியிட்ட படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top