இலங்கையில் இருந்து வெளியேறிய

ஊடகவியலாளர்களுக்கு நாடு திரும்புமாறு அழைப்பு




நாட்டில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களை இலங்கைக்கு மீண்டும் வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரத்ன அழைப்பு விடுத்துள்ளார்.நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தாவது

இராணுவ பாதுகாப்பை ஜனாதிபதி மற்றும் பிரதமரை தவிர வேறு எந்தவொரு அமைச்சருக்கும் வழங்கப்பபோவதில்லை. ஏனையோருக்கு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படும். அதேபோன்று அமைச்சர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய்ந்தே அவர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். நாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை நிறைவேற்று அதிகாரத்தினால் முடக்கினர். இனிவரும் காலங்களில் இவை மீண்டும் முன்னெடுக்கப்படும். தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை பாராளுமன்றத்தில் பெப்ரவரி மாதம் உறுதிப்படுத்துவோம். எமது கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ள முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக நட்டை விட்டு சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரையும் நாட்டுக்கு வந்து தமது ஊடகப்பணியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பொலிஸார் தமது சீருடையின் கெளரவத்தை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். எமது அரசாங்கத்தின் கீழ எந்தவொரு நபருக்கும் அடிபணிய வேண்டிய தேவை இல்லை. லசந்த விக்கிரதுங்கவின் கொலை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்போம். அவர் இந்த நாட்டின் ஜனநாயக தூண் எனக் கூறலாம். அவர் இந்த காலப்பகுதியில் இருந்திருக்க வேண்டும். அதேபோன்று அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து அந்த அறிக்கையை உங்களுக்கு வழங்குவோம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top