இலங்கையில்தான் இருக்கிறேன்
புதிய அரசின் நடவடிக்கைகள்
எனக்கு எதிராக இருக்குமா?
காலம்தான்
பதில் சொல்லும்
-
குமரன் பத்மநாபன்
"இலங்கையில்
இருந்து நான் வெளியேறும் திட்டம் இல்லை' என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த
தலைவரான "கே.பி' என அழைக்கப்படும் குமரன் பத்மநாபன் கூறியுள்ளார்.
இலங்கையில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வெளிநாட்டுக்கு அவர் தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள்
வெளியான நிலையில், "நான் இலங்கையில்தான் இருக்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை
வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சியில் உள்ள தனது ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வெளிநாட்டு
செய்தி ஊடகம் ஒன்றின் செய்தியாளருக்கு தொலைபேசி வாயிலாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை
பேட்டி அளித்திருந்தார்.
குமரன்
பத்மநாதன் மேலும் தெரிவித்திருப்பதாவது,
போரினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் ஆற்றி வரும் மனிதநேயப் பணிகள் தொடர்வதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள
அரசு அனுமதித்தால், இறைவனுக்கு நன்றி சொல்வேன். புதிய அரசின் நடவடிக்கைகள் எனக்கு எதிராக
இருக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
ஆட்சி
மாற்றம் ஏற்பட்ட பிறகு, எனக்கு வழங்கப்படும் இராணுவப் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை
என்று குமரன் பத்மநாபன் கூறினார்.
போரினால்
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்காக, 2 ஆதரவற்றோர் இல்லங்களை கிளிநொச்சியில்
குமரன் பத்மநாபன் நடத்தி வருகிறார். இதனிடையே, "ராஜபக்ஸ அரசுடன் குமரன் பத்மநாபன்
மேற்கொண்ட இரகசிய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளின் பணம் எங்கே போனது ஆகியவை குறித்து
விசாரணை நடத்தப்படும்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
இலங்கையில்
இடம்பெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் விடுதலைப் புலிகள் 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட
பிறகு, இலங்கை இராணுவத்தால் கோலாலம்பூரில் குமரன் பத்மநாபன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து,
விடுதலைப் புலிகளின் பணம், ஆயுதங்கள் ஆகியவை இருக்கும் இடத்தை தெரிவிப்பது தொடர்பாக,
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுடன்
குமரன் பத்மநாபன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. அதற்குப் பிரதிபலனாக,
புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து நிதி வசூலித்து, அதன் மூலம் இலங்கையில் ஆதரவற்றோர்
இல்லம் நடத்த குமரன் பத்மநாபனுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment