அமைச்சர் அதாவுல்லாஹ்வின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

ஆரிப் சம்சுடீன் மைத்திரியுடன் இணைவு!



அமைச்சர் அதாஉல்லா தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போது இணைந்து கொண்டுள்ளார்.
பொலநறுவை தம்பாளையில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் வைத்து மேடையேறிய ஆரிப் சம்சுதீன் பொதுவேட்பாளர் மைத்திரியுடன் இணைந்து கொண்டார்.
கல்முனையைச் சேர்ந்த முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான மர்ஹூம் சட்டத்தரணி சம்சுதீனின் புதல்வரான ஆரிப் நிந்தவுரில் திருமணம் முடித்தவர்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் அதாஉல்லாவின் போக்கு முஸ்லிம் சமூகத்திற்கு  பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கட்சி மாறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களின் நலனைக் கருத்திற்கொண்டும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு முன்வந்துள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கிழக்கு மாகாணசபையில் தேர்தலின் அமைச்சர் அதவுல்லாவின் வெற்றிலைச் சிண்னத்தில் போட்டியிட்டு 3 உறுப்பிணர்கள் தெரிவாணார்கள். அதில் ஆரிப் சம்சுதீன் கல்முனைத் தொகுதியை பிரகடணப்படுத்தினார்.
ஆரிப் சம்சுதீன் தகவல் தருகையில் -கடந்த வாரங்களாக மணச்சாட்சிப்படியும் கிழக்கு வாழ் மட்டும்மல்ல முழு இலங்கை வாழ் முஸ்லீம் சமுகமும் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிப்பதை தவிர்த்து பொதுஎதிரணியில் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆகவே வட கிழக்கில் 90 வீதமான தமிழ் முஸ்லீம்கள் ஒரணியில் திரண்டு இருக்கும்போது நாம் மட்டும் எதிர்த்து ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பது மணச்சாட்சிக்கு விரோதமாகும் என தெரிவித்துள்ளார். அவர் அவரது ஆதரவாளர்களை கல்முனை, நிந்தவூர் பிரதேசங்களின் கலந்து ஆலோசித்து மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளார். தமது பிரதேசத்தில் மைத்திரிபாலவின் வெற்றிக்கே உழைப்பதாகவும்  அறிவித்துள்ளார்.

கடந்த் 10 வருடகாலமாக அமைச்சர் அதாவுல்லாவுக்கு கிழக்கில் 3 மாகணசபை உறுப்பிணர்கள் தொடர்ந்து இருந்து வந்தனர். அதில் ஒருவர் தற்போது எதிரணிக்கு ஆதரவளித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top