ஈராக்கில் வன்முறை சம்பவங்களால் 2014 ஆம் ஆண்டில் மட்டும்

12,282 பொதுமக்கள் உயிரிழப்பு

 ஐ. நா. அறிக்கையில் தகவல்




ஈராக்கில் கடந்த ஆண்டில் மட்டும் அதிக எண்ணிக்கையாக 12,282 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 23,126 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் 2006 ஆம் ஆண்டு முதலே வன்முறை சம்பவங்கள் மற்றும் தீவிரவாத சம்பவங்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு தொடரும் மரணத்தின் ஆண்டாகவே அமைந்தது.
ஈராக்கின் சாதாரணக் குடிமக்கள் மட்டும் நடுத்தர வர்கத்தினர் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், 2014-ம் ஆண்டு அதிகம் பேர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ஆண்டாக இருப்பதாகவும் ஈராக்கிற்கான .நா. உதவிக்குழு தலைவர் நிக்கோலே மிலடனோவ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் தீவிரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களால் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் 1,101 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 680 பேர் பொதுமக்கள், 421 பேர் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈராக் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வை ஒன்று சேர்ந்து கண்டறிய வரவேண்டும் என அனைத்து அரசியல் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top