ஜனாதிபதி தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும்
ஐரோப்பிய ஒன்றியம்
எதிர்வரும்
8ஆம்
திகதி நடைபெறவுள்ள
ஜனாதிபதித் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த
வேண்டும் என்று
இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளைûயும் ஐரோப்பிய
ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து
கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம்
வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
"இலங்கையில் எவ்வித அச்சமுமின்றி இங்குள்ள மக்கள்
தங்கள்
ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு சுதந்திரம்
அளிக்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
"தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக சிறுபான்மை தமிழர்கள் வாக்களிப்பதைத்
தடுப்பதற்கு இராணுவத்தை
அரசு ஈடுபடுத்தக்
கூடும்' என்று
எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன
கடந்த வியாழக்கிழமை கூறியநிலையில், ஐரோப்பிய
ஒன்றியம் இந்த
அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில்,
ஜனாதிபதித் தேர்தல் குறித்து வரம்பு
மீறி ஐரோப்பிய
ஒன்றியம் கருத்து
தெரிவிக்கக் கூடாது என்று இலங்கை வெளி
நாட்டு அமைச்சு கூறியுள்ளது. இதனிடையே, இரத்தினபுரி மாவட்டத்தில்
பெல்மதுளை பகுதியில்
மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில்,
அரசு ஆதரவாளர்கள்
சிலர் கல்வீசித்
தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இக்கல்வீச்சுத் தாக்குதலையடுத்து, அவர் பாதுகாப்பாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
0 comments:
Post a Comment