அ.இ.ம.காங்கிரஸ் சார்பில் சம்மாந்துறைத் தொகுதியில் பெறப்பட்ட

14 ஆயிரம் வாக்குகளுக்குசொந்தக்காரர்கள் யார்?

ஒரு துருவிப் பார்க்கை


கடந்த பொதுத் தேர்தலில் ... காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இவற்றுள் கல்முனைத் தொகுதியில் 8500 வாக்குகளும் பொத்துவில் தொகுதியில் சுமார் 10500 வாக்குகளும் சம்மாந்துறைத் தொகுதியில் 14 ஆயிரம் வாக்குகளும் பெறப்பட்டன. இந்த 14 ஆயிரம் வாக்குகள் எவ்வாறு பெறப்பட்டன. இவற்றுக்கு உரித்துடையவர்கள் யார்? என்பது கட்டாயமாக ஆராயப்பட வேண்டும்.
கடந்தபொதுத் தேர்தலில் சம்மாந்தறையில் முன்னாள் பல்கலைக்கழக உப வேந்தர் டாக்டர் இஸ்மாயீல் அவர்களும், அன்வர் முஸ்தபா அவர்களும் போட்டியிட்டார்கள். அதேநேரம் மாகாண சபை உறுப்பினர் ரீ.. அமீர் அவர்களும் களத்தில் இறங்கி தனது ஆதரவாளர்களோடு ...கா. விற்கு ஆதரவளித்தார். மறுபுறத்தில் குறித்த அளவு சொந்த வாக்கு வங்கியை நீண்ட காலமாகக் கொண்டிருக்கின்ற சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளர் நௌஷாட் அவர்களும் தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார். இந்நிலையில் சம்மாந்துறையில் பெறப்பட்ட வாக்குகள் எத்தனை? மொத்த சம்மாந்துறை தொகுதியில் பெறப்பட்ட வாக்குகள் ஊர் ரீதியாக எத்தனை? இந்த வாக்குகளைப் பெறுவதில் ஒவ்வொரு வேட்பாளர்களினதும் தனிப்பட்ட செல்வாக்குத் தாக்கம் என்ன? என்பதுவும் இங்கு ஆராயப்பட வேண்டியது அவசியமாகும்.
சம்மாந்துறைத் தொகுதியில் அக்கரைப்பற்றின் ஒரு பாகமும் உள்ளடங்குகின்றது. இந்த அக்கரைப்பற்று பாகத்தில் ...கா. 2864 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாக்குகளுக்குச் சொந்தக்காறர் 8 ஆம் இலக்கத்தில் போட்டியிட்ட நபீல் அவர்களாகும். இது அக்கரைப்பற்றின் ஏனைய பகுதிகளில் அவர் பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கு மேலதிகமாகப் பெறப்பட்ட வாக்குகளாகும். எனவே இந்த 2864 வாக்குகள் சம்மாந்துறைத் தொகுதிக்கு உட்பட்டதாக இருந்தபோதிலும் சம்மாந்துறை எனும் ஊரில் பெறப்பட்ட வாக்குகள் அல்ல. அதேபோன்று சம்மாந்துறைத் தொகுதியைச் சேர்ந்த இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை, வாங்காமம், குடுவில் போன்ற ஊர்கள் உள்ளடங்கலாக 2800 வாக்குகளும், நாவிதன் வெளி, பிரதேச சபைக்குட்பட்ட மத்திய முகாம் மற்றும் கொலனி, பகுதிகளில் சுமார் 1700 வாக்குகளும் பெறப்பட்டிருக்கின்றன. இவைகளும் சம்மாந்துறை ஊருக்கு அப்பாற்பட்ட வாக்குகளாகும். இவ்வாக்குகளுக்கும் சம்மாந்துறையில் போட்டியிட்ட வேட்பாளர் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது. ஏனெனில் இறக்காமம் பிரதேசத்திற்கு தனியான ஒரு வேட்பாளராக சுலைமான் களமிறக்கப்பட்டிருந்தார். எனவே இவற்றையெல்லாம் கழித்துவிட்டுப்பார்த்தால் சம்மாந்துறை எனும் ஊரில் பெறப்பட்ட மொத்த வாக்குகள் அண்ணளவாக 7 ஆயிரம் ஆகும். இந்த வாக்குகளுக்குக் கூட சம்மாந்துறையின் பிரதம வேட்பாளர் முன்னாள் உபவேந்தர் தனக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் என்று தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது. ஏனெனில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் அவர்களின் சுட்டுவிரல் அசைவில் ஆகக் குறைந்தது 3 ஆயிரம் வாக்குகளாவது அளிக்கப்பட்டிருக்கும். நௌஷாடையும், சம்மாந்துறை அரசியல் சூழலையும் அறிந்த அனைவருக்கும் இது தெரியும். எனவே எஞ்சியிருக்கின்ற 4 ஆயிரம் வாக்குகளுள் மாகாண சபை உறுப்பினர் ரீ.. அமீர் அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும், முதலாம் இலக்க வேட்பாளர் அன்வர் முஸ்தபாவின் ஆதரவாளர்களும் அளித்த வாக்குகள் ஆகக் குறைந்தது 1500 ஆவது இருக்காதா? என்ற கேள்வியை எழுப்பினால் யாரும் எதிர்மறையாக பதிலளிக்கமாட்டார்கள். ஏனெனில் மாகாண சபை உறுப்பினராக இருக்கின்ற அமீருக்கு ஒரு சிறிய வாக்கு வங்கி கூட இல்லை என்றால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் அதாஉல்லாவின் கட்சியை சேர்ந்தவர். அவர் அதாஉல்லாவிற்கு ஆதரவளித்திருந்தால் அந்த வாக்குகள் ...கா. விற்கு வந்திருக்காது. அதுபோன்றுதான் சம்மாந்துறையைப் பூர்வீகமாகக் கொண்டவரும் சம்மாந்தறையில் திருமணம் முடித்தவருமான 1 ஆம் இலக்க வேட்பாளர் அன்வர் முஸ்தபாவிற்காக ஒரு சில நுாறு வாக்குகள் கூட சம்மாந்துறையில் அளிக்கப்படவில்லை என்றால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த இருவருடைய வாக்குகளாக ஆகக் குறைந்தது 1500 வாக்குகளைக் கழித்தாலும் எஞ்சியிருக்கின்ற 2500 வாக்குகள்தான் முன்னாள் உப வேந்தர் இஸ்மாயீல் அவர்கள் தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொண்ட வாக்குகளாக பகுத்தறிவு ரீதியாக கருத முடியும்.

எனவே, இஸ்மாயீல் சம்மாந்துறை தொகுதியில் அளிக்கப்பட்ட 14 ஆயிரம் வாக்குகளுக்கும் உரிமை கோர முற்படுவது எந்தவகையில் நியாயம்? முன்னாள் உப வேந்தராக இருந்த இஸ்மாயீல் அவர்கள் இவ்வாறு ஊரா கோழி அறுத்து உம்மா பேரில் கத்தம் ஓத முற்படுவது தகுமா?

1 comments:

  1. Mokkanlaum oratha mokkan neengathaan. Makkal pakuththariwaalikal. Sariayaaka inam kanduthaan waku podirukiraarkal. Yaarukaakawum yaarukum waaku panic awarkal alla makkal.

    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top