போர்க்குற்றம் குறித்து ஐ.நா. உதவியுடன்
அரசே விசாரிக்கும்
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்


இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து, .நா. உதவியுடன், இலங்கை அரசே விசாரணை நடத்தும் என்று மனித உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன்  இரண்டு விதமன அறிக்கைகளை தாக்கல் செய்தார்.
அதில், 19 பக்கங்களைக் கொண்ட ஒரு அறிக்கையும், போர்க்குற்றங்கள் குறித்து 251 பக்கங்கள் கொண்ட மற்றொரு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலக அளவில் பலதரப்பட்ட அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில், அதனை .நா. இன்று நிராகரித்துள்ளது.
.நா. உதவியுடன், இலங்கை அரசே போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top