ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ்
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
ஒலுவில் போராளிகள் விடுக்கும் செய்தி. ....
இது
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியின்
ஒலுவில் போராளிகள்
விடுக்கும் செய்தி. ...
நான்கு
பக்கமும் அழிந்த
தீவாக மாறும்
இந்த ஒலுவில்
மண்ணின் கதை.
.
விவசாயத்தையும்
மீன் பிடி
தொழிலையும் பிரதான தொழிலாக கொண்டுள்ள இந்த
மண் இன்று
சுதந்திரமான சுவாசக்காற்றை இழந்து தவிக்கிறது.
கிழக்கில் ஆழிப்பேரலையின்
கோரத்
தான்டபம்
மேற்கில் இராணுவ
குடியேற்றம்
தெற்கில் பயனற்ற
துறைமுகம்
வடக்கில் பல்கலைக்கழகம்
என
நான்கு பக்கமும்
நிலமும் மக்கள்
தொழிலும் இழந்து
தவிக்கும் இந்த
மண் இன்று
ஆதரவு அற்று
அநாதையாகி உள்ளது.
மறைந்த
தலைவர் அஷ்ரபின்
காலத்தில் இந்த
முழுத்தீவுக்கும் அபிவிருத்தியில் பெயர் போன இந்த
மண் அத்
தலைவனின் இழப்பின்
காரணமாக அநாதையாகி
விட்டது.
இங்கு
வாழுகின்ற மக்கள்
குறிப்பாக இளைஞர்கள்
இன்று எந்த
வித வாழ்வாதார
தொழில் மார்க்கம்
இன்றி தவிக்கின்றனர்.
பல்கலைக்கழகத்தில்
ஏற்படுகின்ற சாதாரண மட்ட தொழில் வாய்ப்புகள்
கூட பெற
முடியாத நிலை
விவசாயம்,
மீன் பிடி
செய்ய முடியாத
நில அபகரிப்பு.
.
எது
என்ன நடந்தாலும்
அரசியல் என்று
வரும் போது
இந்த மண்ணும்
மக்களும் இந்த
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ்யை ஆதரிக்கிறது. சென்ற காலங்களில் நடந்தவை
நடந்தது முடிந்ததாக
இருக்கட்டும்.
அம்பாறை
மாவட்டத்தின் ஆட்சியின் அதிகாரிகளாக உள்ள நீங்கள்
இம்முறை இந்த
மண்ணையும் மக்களையும்
குறிப்பாக ஆழிப்பேரலையின்
கோரத் தான்டபத்தை
தடுக்க, மேற்கில்
உள்ள இராணுவ
முகாமை இல்லாமல்
செய்ய. ,தொழில்
மார்க்கத்தை இழந்து தவிக்கும் இளைஞர்களுக்கான தொழில்
வாய்ப்புகளையும் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுப்பீர்கள்
எனவும் நம்புகிறோம்.
இவைகளுக்கான
ஒழுங்கான தீர்வு
உங்கள் மூன்று
பேர்களாலும் எட்டாத பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சி
இருக்கும் அதன்
அம்பாரை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர்களாக நீங்கள் இருக்க மாட்டீர்கள்
என மன
வேதனையுடன் தேரிவிக்கிறோம்.
-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒலுவில் போராளிகள்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.