ஜனாதிபதியின்
சர்வதே முதியோர் தின வாழ்த்துச் செய்தி
எந்தவொரு
சமூகத்திலும் முதியவர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த
மனித வளமாகக்
கருதப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை
அனுபவங்களினூடாக அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தொன்மைக்காலம்
முதலே கீழைத்தேய
மக்கள் முதியவர்களுக்கு
உரிய மரியாதையைக்
கொடுத்து அவர்களுக்கு
சமூகத்திலும் குடும்பத்திலும் உயர்ந்த ஸ்தானத்தை வழங்கிவந்துள்ளனர்.
இலங்கையர்கள் தங்களது விரிந்த குடும்ப முறைமையில்
முதியவர்களுக்கு ஒரு விசேட இடத்தை வழங்கி
அவர்களை குடும்பத்தின்
பெருமையாகவும் கருதுகிறார்கள்.
எவ்வாறானபோதும்
தற்போதைய உலகில்
ஏற்பட்டுவரும் நகரமயமாதல் முதியவர் என்ற பாத்திரத்தின்
இருப்புக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இன்று பல
முதியவர்கள் பழைய வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள அதேநேரம் பிள்ளைகள் அவர்களது வீடுகளில்
இயந்திரங்களாக தங்களது வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.
இத்தகையதொரு
சூழலிலேயே இன்றைய
சர்வதேச முதியோர்
தினம் கொண்டாடப்படுகி;றது. இதுபோன்ற
ஒரு நாளில்
இன்றைய உலகில்
முதியவர்கள் எதிர்நோக்கும் துரதிஷ்டவசமான
நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள்
எடுக்கப்படுவதற்கான தேவையை வலியுறுத்தி
ஒரு தேசிய
உரையாடல் இடம்பெற
வேண்டும்.
இலங்கைச்
சமூகம் தனது
கடந்தகால வரலாற்றிலிருந்து
பெற்றுக்கொண்ட பெறுமதிவாய்ந்த பண்பாடுகளுக்கமைய
ஒரு தீர்வைக்
கண்டடைவதே இன்றுள்ள
சவாலாகும். நவீனமயப்படுத்தல் காரணமாக நகரமயமாதலுக்கு உட்பட்டுள்ள
சமூகத்திற்காக முதியவர்களது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்திக்
கொள்வதற்கும் முதியவர்களுக்கான பாதுகாப்பை
உறுதி செய்வதற்கும்
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதாகும்.
சர்வதே
முதியோர் தினத்துடன்
இணைந்ததாக நடைபெறும்
தேசிய முதியோர்தின
கொண்டாட்டங்கள் முழுமையாக வெற்றிபெற எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
வயோதிபர்களுக்கு
ஒரு பாதுகாப்பான
சமூகத்தை உருவாக்குவதன்
மூலமே அவர்களது
மனக்குறைகளைப் போக்க முடியும்.
மைத்ரிபால சிறிசேன
0 comments:
Post a Comment