ஐ.நா.போர்க் குற்ற விசாரணை அறிக்கை
அசாங்கத்திடம் ஒப்படைப்பு
விடுதலைப்புலிகளுடனான
இறுதிக்கட்டப் போரின்போது இராணுவம் போர்க்குற்றத்தில்
ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நா. விசாரணை
அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா
நகரில் இந்த
மாத இறுதியில்
நடைபெற உள்ள
ஐ.நா.
மனித உரிமை
கவுன்சிலின் (யுஎன்எச்ஆர்சி) 30-வது கூட்டத்தில் வெளியிடப்பட
உள்ள இந்த
அறிக்கையை வெள்ளிக்கிழமை
இரவு பெற்றுக்
கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த
அறிக்கை குறித்து
அரசின் கருத்தை
எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க 5 நாட்கள்
தேவைப்படும் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
விசாரணை அறிக்கை
மற்றும் அது
தொடர்பான அரசின்
பதில் அறிக்கை
ஆகியவை இந்த
மாத இறுதியில்
யுஎன்எச்ஆர்சி-யிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து
வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறும்போது,
“ஐநா மனித
உரிமை கவுன்சில்
கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார
அமைச்சர் மங்கள
சமரவீர மற்றும்
சுகாதாரம் போசனை
மற்றும் சுதேச
வைத்திய துறை
அமைச்சர் ராஜித்த
சேனாரத்ன உள்ளிட்டோர்
ஜெனீவா நகருக்கு
புறப்பட்டுச் சென்றுள்ளனர்” என்றார்.
இந்த
அறிக்கையை கடந்த
பெப்ரவரி
மாதமே வெளியிட
திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ஜனவரி
மாதத்தில் இலங்கையின்
புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மைதிரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதற்கிணங்க நல்லெண்ண நடவடிக்கையாக செப்டம்பர் மாதத்துக்கு
ஒத்திவைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment