பொத்துவிலில் பாடசாலை அதிபர் ஒருவர்
ஊடகவியலாளர், மாணவி ஆகியோர்மீது
அவதுறான வார்த்தைப் பிரயோகம்
(வீடியோ இணைப்பு)
பொத்துவிலில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றின் அதிபரின் செயற்பாட்டினால் தொடர்ச்சியாக மாணவிகளுக்கான கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகளில் ஊறு விளைவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது..
குறிப்பிட்ட அந்த
மகளிர் கல்லூரியின் மாணவிகளுக்கு உளவியலுக்கு மாற்றமான
செய்கைமூலம் ஏசுதல், பரீட்சைக்கு மாணவிகளை
தோற்றவிடாது தடுப்பதற்காக வேண்டி அண்மையில் கூட
அனுமதியட்டை வழங்கப்படாமை என்பன போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் செய்து
வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்
குறிப்பிட்ட மகளிர் கல்லூரியில் பரிட்சை நிலையம்
தொடர்ந்தும் அமைக்கப்பட்டு வருவதனால் மாணவர்களின் கல்வி
பாதிக்கப்படுகிறது. இச்சந்தர்பத்தின் போது மாணவிகள் வெளியில் பிரத்தியேக
பாடங்களை கற்று
தங்களுடைய கற்பித்தலை
மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தடுப்பதும்,
தகாதவார்த்தை மூலம் மாணவிகளை ஏசிப் பழிவாங்குவதும்
தொடர்ந்து நடைபெறுவதாகவும் மாணவிகளால்
புகார் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு
குற்றங்களோடு உலா வருகின்ற இப்பாடசாலை அதிபரை மாற்றீடு
செய்ய அரசியல்வாதிகள்
முன்வரவேண்டும் என வேண்டுகோள்
விடுக்கப்படுகின்றது.
பொத்துவிலில்
தகுதியான அதிபர்கள்
பாடசாலைபொறுப்பின்றி தனித்துவிடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும்
தனது அரசியலுக்காக
வேண்டி அங்குள்ள
தகுதியான ஆசிரியர்களோடு
முரண்படுவதும், மாணவர்கள், பெற்றோர்களோடும்
முரண்படுவது ஏற்கமுடியாது.
தகுதியற்ற
இந்த அதிபரை
உடனடியாக மாற்றம்
செய்து தகுதியான
ஒருவரை நியமிக்க
உரிய அதிகாரிகள்
முன் வர
வேண்டும் என
பெற்றோர்களும் மாற்றம் தேவை எனும் குளுமத்தினரும் வேண்டிக்கொள்கின்றனர்
அத்தோடு அக்குளுமத்தினர் குறித்த
அதிபர் மீது
நடவடிக்கை எடுப்பதற்காக
உயர் அதிகாரிகளையும்
தொடர்புகொண்டுள்ளதாக அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://youtu.be/vRWY0JC7Soo
0 comments:
Post a Comment