அமெரிக்க ஜனாதிபதி
பதவிக்கு முஸ்லிம்கள் தகுதியற்றவர்கள்
குடியரசு கட்சி வேட்பாளர் பென் கார்சன் சர்ச்சையை கிளப்பியுள்ளார்
அமெரிக்க
ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின்
சார்பில் வேட்பாளாராக
அறிவிக்கப்பட்டுள்ள பென்
கார்சன், முஸ்லிம்கள் அமெரிக்க
ஜனாதிபதி பதவிக்கு
தகுதியற்றவர்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
என்.பி.சி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு
பென் கார்சன்
“ மீட் த பிரஸ்” என்ற நிகழ்சியில்
கலந்து கொண்டு
பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம்,
ஜனாதிபதியின் மதமும்
முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் ஒன்றா என
கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த
பென் கார்சன்,
நம்பிக்கை அடிப்படையில்
இது இருப்பதாக
நான் ஊகிக்கிறேன்.
அமெரிக்காவின் கொள்கைகளுக்கும் மதிப்புகளுக்கும்
முரணாக இது இருந்தால்,
பின்னர் இது
நிச்சயமாக பரீசிலிக்க
வேண்டிய ஒன்றுதான்.
ஆனால், இது
அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்துடனும்
ஆட்சி அதிகாரத்துடனும் முரண்பாடின்றி
பொருந்துவதாக இருந்தால், எந்த பிரச்சினையும் இல்லை”
என்றார்
பின்னர்
கார்சனிடம் இஸ்லாம் மதம் அமெரிக்காவின் அரசியலைமைப்புடன்
ஒத்திருகிறதா? என்று கேள்வி எழுப்பட்டது. இக்கேள்விக்கு
பதிலளித்த அவர்,
எனக்கு தெரியாது
என்றார். தொடர்ந்து
அவர் கூறுகையில்,
இந்த நாட்டிற்கு
முஸ்லிம் பொறுப்பாளரை நியமிப்பதற்கு
நான் ஆதரவு
அளிக்கப்போது இல்லை. இதை நான் முற்றிலும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment