கோத்தபாய ராஜபக்ஸவின்
ஆசனத்தில் தான் அமரப்போவதில்லை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

பாதுகாப்புச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஊடக நிகழ்ச்சியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இராணுவத்தை விட்டு தப்பியோடி, பின்னர் சகோதரனின் செல்வாக்கை பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த ஒருவரது ஆசனத்தில் தான் அமரமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பீல்ட் மார்ஷல் எனும் உயரிய பதவியின் கௌரவத்தை தான் இழக்க விரும்பவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top