'முஹம்மத் மெஸென்ஜர் ஆஃப் காட்'

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இஸ்லாமிய அமைப்பால்
பத்வா' அறிவிப்பு!


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயரைத் தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட்' என்கின்ற ஈரானிய மொழி திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்தப் படத்துக்கு இசையமைத்த .ஆர். ரஹ்மான், பிரபல இயக்குநர் மஜித் மஜிதி உள்ளிட்டோருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று பத்வா (மார்க்கத்தீர்ப்பு) விதித்துள்ளது.
பத்வா விதித்த ராஸா அமைப்பின் தலைவர் ஸயீத் நூரி இதுபற்றி கூறும்போது,

இந்த தலைப்பை நாங்கள் எதிர்க்கிறோம். படம் பிடிக்கவில்லையென்றால் மக்கள் இந்த தலைப்பை கிண்டல் செய்ய வாய்ப்புண்டு. அது நபிகளுக்கு அவமதிப்பாகும் என்கின்றார். இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top