ஆசிரியரின் கைதட்டல் வாங்க ஆசைப்பட்டு
கைவிலங்கிடப்பட்ட அஹ்மத் முஹம்மத் எனும் மாணவன்
14 வயதே
ஆன அஹ்மத்
முஹம்மத் அமெரிக்க
டெக்ஸாஸ் மாநிலத்தின்
ஓர் ஊரின்
பாடசாலை மாணவன்.
அவன் ஒரு
முஸ்லிமின் மகன் என்பதால் துவக்கு,வெடிகுண்டு, தற்கொலைக்குண்டு
போன்றவைகளுடன் தொடர்பிருக்கும் என்று அவனது வகுப்பாசிரியரின்
உள்ளத்தில் அவனைப்பற்றிய எண்ணப்பாடு இருந்து வந்ததன்
விளைவுதான் இன்று அஹ்மத் முஹம்மத் பிரபல்யமாக காரணம்.
பள்ளியில் நடைபெற்ற
பொறியியல் திட்டத்தின் ஒரு பகுதியில். தான்
சுயமாக தயாரித்த
டிஜிட்டல் கடிகாரத்தை
பார்வைக்கு வைத்தார். அதைபார்த்த அறிவியல் பயிற்றுவிப்பாலர்
பாராட்டினார். ஆனால் மற்றொரு பள்ளி ஆசிரியை வெடிகுண்டு
போன்று இருப்பதாக
கூறி
பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தார்.உடனடியாக
பள்ளி நிர்வாகம்
காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தது.
காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர்.
பின்னர் விசாரித்து
கடிகாரம் தான்
தயாரித்துள்ளார் என்பதை அறிந்து வழக்கு எதுவும்
பதிவு செய்யாமல்
விடுவித்து விட்டனர்.
ஆசிரியரின்
கைதட்டல் வாங்க
ஆசைப்பட்டு கைவிலங்கிடப்பட்ட நிலையில் பொலிஸாரின் பிடியில் 14
வயதே ஆன
கெட்டிக்கார மாணவன் அஹ்மத் முஹம்மத்.
இதனை
அறிந்த ஊடகங்கள்
அடுத்த கணம்
அஹ்மத் முஹம்மதின்
வீட்டின் முன்னால்
பெருங்கூட்டமாக.. அஹ்மத் முஹம்மதின் தந்தையோ இந்த
செய்தியை பலவாறாக
பரப்புவதற்கு தனது வீட்டின் முன்னால் கூடியிருந்த
ஊடகவியாளலர்களுக்கு பிஸ்ஸா பரிமாறுகிறார்.
இறுதியில் அஹ்மத்
முஹம்மதின் உண்மை நிலை உலகுக்கு தெரிய
வருகிறது.
தத்தமது
மனங்களில் தாமாகவே
ஏற்றி இருக்கின்ற..
ஏற்றப்பட்டிருக்கின்ற.. இன வெறியின் வெளிப்பாடுகள்
எப்படியும் வெளிப்படலாம். தனி ஒருத்தனாகிலும் அல்லது
ஒரு இனமாகிலும்
மேலோட்டமான பார்வையை மட்டும் வைத்து எடை
போட்டு விடுவது
நாம் எல்லோரும்
விடுகிற தவறுகள்.
அதிலும்
வெள்ளையர்கள் பலருக்கு முஸ்லிம் என்றாலே பயங்கரவாதிதான்
என்ற எண்ணம்.
இதனை கடுமையாக கண்டனம் தெரிவித்த மார்க் அவனை பேஸ்புக் அலுவலகத்தில் வர அழைப்பும் விடுத்துள்ளார்.
இது
குறித்து சிறுவன்
அளித்த பேட்டியில்
'ஒரு பொலிஸ் அதிகாரியும், அதிபரும், என்னை 5 பொலிஸ் அதிகாரிகள் உள்ள
ஒரு அறைக்கு
அழைத்து சென்றார்கள்',
மேலும், ' நீ குண்டு தயாரிப்பதற்காக இதை செய்தாயா',
என்று திரும்ப
திரும்ப கேட்டார்கள்
ஆனால், நான்
திட்டமாக அதை
மறுத்து என்னுடய
நோக்கம் கடிகாரம்
செய்வது தான்
என்று கூறினேன்.பின்னர் சிறைக்கழைத்து
செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டேன் என்றார்
உலகம்
முழுவதும் அதிர்ச்சியை
ஏற்படுத்திய மாணவ சிறுவன் அஹமது கைதானதை கண்டித்து
கடும் கண்டனங்கள்
எழுந்து வரும்
நிலையில்
அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமா டுவிட்டர்
பக்கத்தில் மாணவ சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்து
வெள்ளை மாளிகைக்கு
அழைப்பு விடுத்துள்ளார்.
கூல்
கடிகாரம், அகமதுவை.
வெள்ளை மாளிகைக்கு
அழைத்து விரும்புகிறது?
நீங்கள் அறிவியல்
போன்ற வற்றில் நாம் இன்னும் குழந்தைகள்
ஊக்குவிக்க வேண்டும். அது அமெரிக்காவில் செய்யப்படுகிறது.
President Obama @POTUS
Cool clock, Ahmed. Want to bring
it to the White House? We should inspire more kids like you to like science.
It's what makes America great.
மேலும்
பேஸ்புக் நிறுவனர்
உள்ளிட்ட சர்வதேச
அளவில் முன்னணி
நிறுவன உரிமையாளர்கள்
உள்ளிட்ட ஏராளமானவர்கள்
மாணவ சிறுவனுக்கு
ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்கர்கள்
அந்த சிறுவனுக்காக
ஹேஷ் டேக்
உருவாக்கி ஆதரவு
தெரிவித்து வருகிறார்கள்
0 comments:
Post a Comment