சிலியில் கடும் நிலநடுக்கம்
சுனாமி எச்சரிக்கை

சிலியில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் கடல் பகுதியின் மேற்கே தலைநகர் சாண்டியாகோவிலிருந்து 227 கி.மீ. தொலைவில் உள்ள இலாபெல் பகுதியில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.3 அலகுகளாக இது பதிவானதாக அறிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து சிலியின் அண்டை நாடுகளான மெக்சிக்கோ, பெரு மற்றும் ஹவாய் போன்ற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்பலியான 5 பேரில் இருவர் பெண்கள் என்றும் ஒருவர் மாரடைப்பினால் காலமானதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
30 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top