ஜனாதிபதியின்
சர்வதே சிறுவர் தின வாழ்த்துச் செய்தி
“சிறுவர் நட்புடைய சூழல்
– உலகிற்கு ஒளியூட்டும் அழகிய தேசம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும்
இவ்வருட சர்வதேச சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு தேசம் அல்லது ஒரு மக்கள் சமூகம் தனது மக்கள் அல்லது சமூகப்
பிள்ளைகளுக்கு வழங்கும் அன்பு மற்றும் பராமரிப்பினூடாக உலகின் உயர்ந்த அங்கீகாரத்தைப்
பெறுக்கொள்கின்றனர். மனித நாகரீகத்தின் மிக உயர்ந்த பெறுமானம் பிள்ளைகளுக்கான அன்பும்
இரக்கமுமாகும். எனவே தான் “உலகில் மிகச் சிறந்தவை சிறுவர்களுக்குச் சொந்தமானவையாகும்” எனச் சொல்லப்படுகிறது.
சிறுவர்களுக்கான பாதுகாப்பு முதலில் பெற்றௌர்களிடமிருந்தும்
பின்னர் ஆசிரியர்களிடமிருந்தும் மூன்றாவதாக பெரியவர்களிடமிருந்தும் சமூகத்திலிருந்தும்
கிடைக்கப் பெறவேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்புக்கான ஒட்டுமொத்த நிபந்தனையற்ற பொறுப்பு
முழுத் தேசத்தின் மீதும் உள்ளது. என்றாலும் இப்பொறுப்பு சமூகத்தினால் பெரிதும் தட்டிக் கழிக்கப்பட்டிருப்பதையே அண்மைய
நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த நிலைமையை உடனடியாக சரிப்படுத்துவதற்கும் சட்டங்களை
நடைமுறைப்படுத்தவதற்கான ஏற்பாடுகள் செய்யவூம் இருக்கின்ற சட்டங்களைத் திருத்துவதற்கு
அல்லது புதிய சட்டங்களை அறிவுமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் பெற்றௌர்கள்இ வளHந்தவHகள் மற்றும் சமூகம் இந்த துரதிஷ்டவசமான
பேரனர்த்தங்களிலிருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு முழுமையாக தங்களை அர்ப்பணிக்க
வேண்டும். இந்தவகையில் அரசாங்கம் ஏற்கெனவே
பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடுஇ இப்பணியில் சமூகமும் முழுமையாக இணைந்து கொள்ள வேண்டும்.
தங்களது தொடர்ந்தேர்ச்சியான கவனம் பிள்ளையின் பாதுகாப்புக்கான
ஒரு உத்தரவாதம் என்பதை பெற்றௌர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் விடப்படும் கவனக்குறைவு பிள்ளையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடுவதுடன்,
அது அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான ஒரு திறந்த அழைப்பாகவூம் மாறிவிடுகிறது.
சர்வதேச சிறுவர் தினத்தை ஒரு நாளையில் கொண்டாடுவது மட்டும் போதுமானதல்ல.
ஒவ்வொரு நாளும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டால்தான் அவர்கள் எதிர்பார்க்கும்
வாழ்க்கைக்கான பாதுகாப்பை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்கள் முழுமையாக வெற்றிபெற எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மைத்ரிபால சிறிசேன
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.