ரணில் பதவிக் காலத்தில்
இலங்கை உறவு மேம்படும்
இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் நம்பிக்கை
இலங்கை
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க பதவிக் காலத்தில் அந்த நாட்டுடனான
இந்தியாவின் உறவு மேலும் மேம்படும் என்று
இந்திய குடியரசுத்
தலைவர் பிரணாப்
முகர்ஜி நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.
மூன்று நாள்கள் அரசுமுறைப்
பயணமாக புது டில்லிக்கு கடந்த திங்கள்கிழமை
ரணில் விக்ரமசிங்க
சென்றிருந்தார்.
அவர் இந்திய
பிரதமர் நரேந்திர
மோடியை செவ்வாய்க்கிழமை
சந்தித்து இரு
தரப்பு நல்லுறவு
குறித்துப் பேசினார். இரு தலைவர்கள் முன்னிலையில்
இரு நாடுகளின்
பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர்.
இதைத் தொடர்ந்து, முன்னாள்
பிரதமர் மன்மோகன்
சிங், காங்கிரஸ்
தலைவர் சோனியா
காந்தி ஆகியோரையும்
ரணில் விக்ரமசிங்க
சந்தித்துப் பேசினார்.
குடியரசுத்
தலைவருடன் சந்திப்பு: நேற்று புதன்கிழமை காலை,
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது
மாளிகையில் தனது மனைவி மைத்திரியுடன் ரணில்
விக்ரமசிங்க சந்தித்தார்.
சுமார்
30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின் போது,
பரஸ்பரம் இரு
தரப்பு நல்லுறவுகள்
குறித்து இரு
தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து
குடியரசுத் தலைவர் மாளிகைச் செயலகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில், "ரணில் விக்ரமசிங்க
பதவிக் காலத்தில்
இந்தியா - இலங்கை
இடையிலான நல்லுறவு
மேலும் மேம்படும்
என்ற நம்பிக்கை
எனக்குள்ளது.
ரணில் தலைமை மீதும்
அவரது கட்சி
மீதும் இலங்கையர்கள்
கொண்டுள்ள நம்பிக்கையின்
வெளிப்பாடாக அவரது தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.
வரலாறு,
கலாசாரம், புவியியல்
தொடர்புகள் போன்றவை இந்தியா - இலங்கை நல்லுறவின்
சிறப்புகளாகும்.
ரணில் ஆட்சிக் காலத்தில்
இரு தரப்பு
உறவு புதிய
உயரத்தை அடையும்
என குடியரசுத்
தலைவர் பிரணாப்
முகர்ஜி கூறியுள்ளார்'
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக,
ரணில் விக்ரமசிங்கவை
அவர் தங்கியிருந்த
ஹோட்டல் தாஸ்
பேலஸýக்குச்
சென்று மத்திய
நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்துப் பேசினார்.
அப்போது
இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் உட்கட்டமைப்புத் திட்டங்கள்
குறித்தும் தமிழர் பகுதியில் மறுவாழ்வுப் பணிகளுக்காக
ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் பயன்பாடு குறித்தும் இருவரும்
பேசினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியப்
பயணத்தை முடித்துக்கொண்டு
நேற்று பகல்
1.30 மணிக்கு டில்லியில் இருந்து தனி
விமானத்தில் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.