துருக்கி கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்ட
ஆய்லான் குர்திக்கு
ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
துருக்கி கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயதான ஆய்லான் குர்தி எனும் பச்சிளம் குழந்தைக்கு
ஆதரவாக எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு-7 ல் உள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்திற்கு
முன்பாக நண்பகல் 1.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மனித நலன் இலங்கை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம்
ஒழுங்கு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment