அமைச்சர் ரவூப்
ஹக்கீம் கடமைகளை பொறுப்பேற்றார்
ஹுனைஸ் பாறூக்கும் பங்கேற்பு
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக
இன்று காலை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்க வருகைதந்தபோது பத்தரமுல்ல, பெலவத்தையில்
அமைந்துள்ள அமைச்சின் முன்றலில் அமைச்சு ஊழியர்களால் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடெங்கிலுமிருந்து வந்திருந்த ஆதரவாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடமைகளை
பொறுப்பேற்கும் இவ்வைபவத்தில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்
பாறூக், கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர்
அஹமத், கல்முனை மேயர் சட்டத்தரணி. நிஸாம் காரியப்பர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment