கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட
மாணவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பாடசாலையில் 9-வது தரத்தில் படிப்பவர் அகமது முகமது(வயது14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, அதனை திங்கள்கிழமை தனதுகுப்புக்குக் கொண்டு வந்து ஆங்கில ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல.
அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அகமது கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கைது செய்யப்பட்ட முஸ்லிம் மாணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ஒபாமா அவரை வெள்ளை மாளிகையில் அடுத்த மாதம் நடைபெறும் விண்வெளி அறிஞர்களுக்கான விருந்தில் கலந்துக்கொள்ள அழைத்துள்ளார்.
 இது பற்றி டுவிட்டரில் ஒபாமா கூறியுள்ளதாவதுஉங்கள் கடிகாரம் மிகவும் அருமை. அதை அதிபர் மாளிகைக்கு எடுத்து வர விருப்பமா? உங்களைப் போன்ற சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதுதான் அமெரிக்கா பெருமைமிக்க நாடாக வைத்திருக்கும்என்று அவர் தெரிவித்துள்ளார்.
தான் உருவாக்கிய கடிகரத்தின் அலராத்தையே , தினமும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துக்கொள்ள பயன்படுத்தியுள்ளார் அகமது. அவர் கைது செய்யப்பட்ட போது அணிந்திருந்த பனியனில் இருந்த சொல்நாசா.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top