அக்கரைப்பற்றை அழகுபடுத்திய அதாவுல்லா
வெற்றி பெற்றுள்ள மூவரும் தமது துரித சேவைகளைச்
செய்து காட்ட வேண்டும்

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அக்கரைப்பற்று நகரை அழகுபடுத்தியும் அந்தப் பிரதேச மக்களுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுத்தும் தனது சேவையை நடுநிலையானவர்கள் எல்லோரும் பாராட்டும்படி செய்து காட்டியுள்ளார்.
அதாவுல்லா தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் தனது சேவைகள் மூலமாக நடுநிலையானவர்கள் மத்தியில் வெற்றி பெற்றுவிட்டார்
அதாவுல்லாவின் சேவைத் திறனை உதாரணமாகக் கொண்டு திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை வெற்றி பெற்றுள்ள மூவரும் தமது துரித சேவைகளைச் செய்து காட்ட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.

அக்கரைப்பற்று போன்று கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் பிரதேசங்கள் அபிவிருத்தி காண வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top